ஒரு செல்போனில் இருந்து மற்றொரு செல்போனுக்கு புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் (Google Photos) மூலமாக அனுப்ப வேண்டும் என்றால் தனித்தனியாக புகைக்கப்படங்களை கிளிக் செய்து, அதன்பின் தான் அனுப்ப முடியும். இது மிகவும் கடினமாக இருப்பதாக பயனர்கள் தொடர்ச்சியாக கூகுளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று கூகுள் நிறுவனம் பயனர்கள் புகைப்படங்களை முழு ஆல்பமாகவே அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து கூகுள் போட்டோஸ் ஷேரிங் பொறியாளர் சஞ்சுக்த மாத்தூர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த டிசம்பர் மாதம், பயனர்கள் தங்களது நணபர்களுக்குப் பிரத்யேகமாக குறிப்பிட்ட போட்டோஸ், வீடியோஸ் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தினோம்.
தற்போது, தனித்தனி போட்டோஸாக அனுப்பாமல் ஒரு முழு ஆல்பத்தையே குறிப்பிட்ட நபருடனோ அல்லது குரூப்புடனோ பகிர்ந்து கொள்ளாலம். கூகுளில் கணக்கு இல்லாதவர்களுக்கு ஜிமெயில், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் வழியாக ஆல்பம் ஷேரிங்கான லிங்கை அனுப்பலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
-
Rolling out this week, you’ll have the option to share albums in Google Photos with specific people—no link required. This gives you more control over who’s added to the album. https://t.co/7K5UuNLuv4 pic.twitter.com/94S7NZAxqR
— Google Photos (@googlephotos) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rolling out this week, you’ll have the option to share albums in Google Photos with specific people—no link required. This gives you more control over who’s added to the album. https://t.co/7K5UuNLuv4 pic.twitter.com/94S7NZAxqR
— Google Photos (@googlephotos) May 19, 2020Rolling out this week, you’ll have the option to share albums in Google Photos with specific people—no link required. This gives you more control over who’s added to the album. https://t.co/7K5UuNLuv4 pic.twitter.com/94S7NZAxqR
— Google Photos (@googlephotos) May 19, 2020
இதையும் படிங்க: பல செயற்கை நுண்ணறிவு மாடல்களுக்கு பயிற்சி... மைக்ரோசாப்ட்டின் சூப்பர் கம்ப்யூட்டர்!