ETV Bharat / business

கார்ப்பரேட் வரி குறைப்பால் பலனடைந்த பிரபல சிகரெட் நிறுவனம்!

காா்ப்பரேட் வாி குறைப்பால், ஐ.டி.சி. சிகரெட் நிறுவனத்தின் பங்குகள் ஏழு விழுக்காடு வரை வளர்ச்சி கண்டுள்ளது.

cigarette
author img

By

Published : Sep 30, 2019, 9:46 AM IST

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பெருளாதார மந்தநிலை இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. இது 'தேசிய அபாயம்' என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதையடுத்து மத்திய அரசு காா்ப்பரேட் வரியை 10 விழுக்காடு வரை குறைத்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகாித்துள்ளன.

இந்த மாதத்தில் மட்டும் சுமாா் ஏழாயிரம் கோடிவரை அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தக் காா்ப்பரேட் வரி குறைப்பால் ஐ.டி.சி. சிகரெட் தயாரிப்பு நிறுவனம் பெரும் லாபம் ஈட்டியுள்ளது. அதாவது அந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் ஏழு விழுக்காடுவரை வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் அதிகாித்துவருகின்றனர்.

நடப்பு நிதியாண்டில் ஐ.டி.சி. பங்குகளில் அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும். ஐ.டி.சி. சிகரெட்டுகள் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் மூன்று விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.

மின்னணு (இ) சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்ட போதிலும், ஐ.டி.சி. முதலீடுகளை வெகுவாக ஈா்த்துவருகிறது. இதற்கு பல்வேறு தரப்பட்ட சிகரெட்டுகளை அந்நிறுவனம் விற்பனை செய்துவருவதே காரணம்.

நிகழாண்டில், ஐ.டி.சி. சிகரெட் பங்குகள் வருவாய் அடிப்படையில் 22 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஜிஎஸ்டி, வரி விதிப்பு, சிகரெட் பொருட்களின் செஸ் வரி அதிகரிப்பு பல்வேறு சுமைகளை ஏற்றியபோதும், வருமானத்தில் குறைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:

செப்டம்பரில் வெளிநாட்டு முதலீடு ரூ.7¸714 கோடியாக அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.