ETV Bharat / business

ரயில்வே பயணிகள் பாதுகாப்பாக உள்ளார்களா?

ஹைதராபாத்: நிதிப்பற்றாக்குறையால் ரயில்வே துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் பாதி அளவு மட்டுமே தற்போது வழங்கி வருவதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டு ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Indian railway
Indian railway
author img

By

Published : Mar 8, 2020, 5:50 PM IST

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிதிநிலை அறிக்கையின் பொது, ரயில்வே துறைக்கென்று ஒரு பெரும் அளவுத் தொகையை ஒதுக்கினார். புது புது திட்டங்களை ரயில்வே துறையில் அறிமுகப்படுத்துவன் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற கணிப்பின் மூலம் ரயில்வே துறை பெரும் அளவுத் தொகையை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, 2017-18 நிதியாண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை, ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் 20,000 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்த பின், அதே நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் ரயில்வே துறை லாபம் ஈட்டியது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு, ரயில்வே துறைக்கு வழங்கிவந்த 20,000 கோடி ரூபாய் பாதியாக குறைந்ததால், ரயில்வே துறை சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்தியப் பொருளாதாரம் சரிவை காண்பதாலும், நிதிப்பற்றாக்குறையாலும் முழுமையான தொகையை ரயில்வே துறைக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த பற்றாக்குறைக்கெல்லாம் தீர்வு கண்டு ரயில்வே துறைக்குப் போதுமான தொகையை வழங்குவோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரயில்வே துறைக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதால், ரயில்வே உணவுகளின் தரம் குறைந்து விட்டதும் என்றும், ரயில்கள் குறிப்பாக தென் இந்திய ரயில்களில் சுகாதாரம் சீர்கெட்டு உள்ளதாகவும் பல புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

முக்கியமாக, ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளதால், பயணிகளின் பாதுகாப்பிற்கு விளைவு ஏற்பட்டுள்ளது.

இதனை மத்திய அரசு உடனே கருத்தில் கொண்டு, ரயில்வே துறைக்கு வழங்கவேண்டிய தொகையை முழுமையாக வழங்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரயில்வே துறை உயர்வதன் மூலம், இந்திய பொருளாதாரமும் விரைவில் மேம்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: யெஸ் வங்கி நிறுவனர் ரானா கப்பூர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.