கைப்பேசித் துறையில் பல்வேறு நிறுவனங்கள் தினந்தோறும் அதீத தொழில்நுட்பத்துடன் புதிய செல்போன்களை வெளியிடுகிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் செல்போன்களை அதீத கிராபிக்ஸ் வசதிகளுடன் இருக்கும் கேம்ஸ் விளையாடுவதற்காகவே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அசுஸ் நிறுவனம் கேமிங்காகவே அனுஅனுவாய் செதுக்கியுள்ள ஆசுஸ் ரோக் போன் 2 (ASUS ROG) செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போன் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ஆசுஸ் ரோக் போன் 2 முக்கிய அம்சங்கள்:
- 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- டி.டி.எஸ் வசதியுடன் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC(Qualcom Snapdragon 855 SoC)
- 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா , 13 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா
- 24 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 8 ஜிபி ரேம்
- ஆண்ட்ராய்டு 9 பை
- 6000mah பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் 4.0
ஆசுஸ் ரோக் போன் 2 செல்போன் 8ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 37,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் 12 ஜிபி ரேம் மாடல் விற்பனைக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கேமிங் செல்போன் விலை அதிகமாக காணப்பட்டாலும் விளையாட்டு பிரியர்களுக்கு கச்சிதமான செல்போனாகவே காணப்படுகிறது.
இதையும் படிங்க: ஐபோன்11 சீனாவில் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை!