ETV Bharat / business

வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் கடன் அட்டை ”குறைந்தவட்டியும், கட்டணங்கள் இல்லா சேவையும்!” - ஆப்பிள் பே

ஆப்பிள் கடன் அட்டையை (Credit Card) அதன் ஊழியர்கள் மட்டுமே, இரண்டாம் கட்டச் சோதனைக்காக (பீட்டா டெஸ்டிங்) பயன்படுத்தும் நிலையில், ஆகஸ்ட் மாதம் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

apple credit card
author img

By

Published : Aug 1, 2019, 2:38 AM IST

டெக் நிறுவனங்கள் நிதித்துறை பக்கம் கவனம் செலுத்தும் காலம் இது. ஃபேஸ்புக் மின்னிலக்க நாணயம் (டிஜிட்டல் கரன்சி) பக்கம் ஒதுங்கியிருக்கிறது. இப்போது ஆப்பிள் கடன் அட்டை பக்கம் வந்திருக்கிறது. ஆப்பிள் ஊழியர்கள் மட்டும் இரண்டாம் கட்டச் சோதனையை (பீட்டா டெஸ்டிங்) பயன்படுத்தும் இந்த கடன் அட்டை ஆகஸ்ட் மாதம் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள்.

மின்னிலக்க முறையிலும், அதே சமயம் நாம் பயன்படுத்தும் கடன் அட்டை போலவும் இரண்டு வடிவங்களில் இந்த அட்டை கிடைக்கும். ஆனால், வழக்கமான அட்டைகளில் இருப்பதுபோல 16 இலக்கம் எண், 3 எண் கொண்ட CVV ஆகியவை இருக்காது.

ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதும் இவை புதிதாக உருவாக்கப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் அட்டைதான் என்றாலும், கோல்டுமேன் சேக்ஸ் (Goldman sachs) என்ற நிறுவனத்துடன் கைகோத்து இதைச் செய்யவிருக்கிறது ஆப்பிள். நாம் எப்போது, எங்கே, எவ்வளவு ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினோம் என்பதையெல்லாம் மூன்றாம் நிறுவனம் எதுவும் டிராக் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்கிறது ஆப்பிள்.

கடன் அட்டை என்றால் கேஷ்பேக் இல்லாமலா? ஆப்பிள் பே மூலம் செய்யும் பரிவர்த்தனைகளில் 2% ஆப்பிள் ஸ்டோரில் வாங்கும் பொருள்களுக்கு 3% கேஷ்பேக் கிடைக்கும். இந்த அட்டைக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. மற்ற நாடுகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் கிடையாது. தாமதக் கட்டணம் உள்ளிட்ட எந்தப் பிற கட்டணங்களும் கிடையாது. வட்டியும் மற்ற கடன் அட்டைகளைவிட குறைவாக இருக்குமென மார்ச் மாதம் நடந்த நிகழ்வில் சொல்லியிருந்தது ஆப்பிள்.

ஆப்பிள் வாலெட் பயன்படுத்துபவர்கள் இந்த அட்டை பெறலாம். எங்கெல்லாம் ஆப்பிள் பே ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த அட்டையையும் பயன்படுத்தலாம். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனச் சொன்ன ஆப்பிள் தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் அவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.