ETV Bharat / business

ஒரே ஆண்டில் வருவாய் மூன்று மடங்கு உயர்வு - அசத்தும் ஜூம் செயலி

author img

By

Published : Mar 2, 2021, 3:39 PM IST

2020-21ஆம் நிதி ஆண்டில் மட்டும் மூன்று மடங்கு வருவாய் உயர்த்தி பெரும் லாபத்தை ஜூம் செயலி ஈட்டியுள்ளது.

Zoom
ஜூம் செயலி

முன்னணி காணொலி தொடர்பு செயலியான ஜூம் நிறுவனம் தனது வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 3.26 மடங்கு (326%) வருவாயை ஈட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் மட்டும் 3.69 மடங்கு வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் கோவிட்-19 முடக்கம் காரணமாக காணொலி வாயிலாக மேற்கொள்ளும் நிர்வாக நடவடிக்கைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, ஜூம் நிறுவனம் 2020-2021ஆம் நிதியாண்டில் அபார வளர்ச்சியை கண்டுள்ளது.

எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று ஆதரவு தரும் வாடிக்கையாளர்களுக்கும், சிறப்பாக செயல்பட துணை நிற்கும் தொழில் கூட்டாளிகளுக்கும் நன்றி என ஜூம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எரிக் எஸ் யுவான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சந்தை நிலவரம்: வாரத்தின் முதல் நாளில் அமோக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.