ETV Bharat / business

இ.எம்.ஐ. தவணை நீட்டிப்புக்குள் இத்தனை இரகசியங்களா? - இ.எம்.ஐ. தவணை காலக்கெடு

ஹைதராபாத்: கரோனா லாக்டவுன் காலத்தில் நிதிச்சுமையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி கடன் தவணையில் சில சலுகைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி மேலாண்மை ஆலோசகர் சஞ்சித் கர்க் ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தமிழாக்கம் இதோ...

EMI
EMI
author img

By

Published : Jun 13, 2020, 5:03 PM IST

Updated : Jun 13, 2020, 5:15 PM IST

வங்கிகளில் வீடு, வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை கணக்கில் கொள்ளப்படாமல் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், ஐசிஐசிஐ, ஆக்சிஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்ற வங்கி மற்றும் வங்கிசாராத நிதி நிறுவனங்களில் 25-30 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மூன்று மாத தவணை நீட்டிப்பை பெற்றுள்ளனர்.

அதேவேளை பந்தன் வங்கியில் 71 விழுக்காடு வாடிக்கையாளர்கள் இந்த கடன்தவணை நீட்டிப்பை பெற்றுள்ளனர்.

இந்தக் கடன் நீட்டிப்பு தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே கடன் தவணை நீட்டிப்பின் அடிப்படை நோக்கம். மேலும், இந்த நீட்டிப்பு தள்ளுபடி அல்ல.

ஒரு ஒத்திவைப்பு நடவடிக்கை தான் என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், இந்த ஒத்திவைப்பு காலத்தில் கட்டப்படவேண்டிய தொகைக்கான வட்டி தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

இந்த இஎம்ஐ விவகாரத்தில் ஒரு நற்பயன் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. இந்த ஆறு மாத காலத்தில் கடன் தவணை செலுத்தாதற்கு பெனால்டி எனப்படும் அபராதத் தொகை செலுத்த வேண்டியது இல்லை.

எனவே ஒருவர் கடன் தவணை நீட்டிப்பு சலுகையை கையிலெடுக்கும் முன் மூன்று அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • இந்த ஆறுமாத காலத்தில் சேர்ந்துள்ள வட்டித் தொகையை ஒரு தவணையில் செலுத்திவிடுங்கள்.
  • மேலும் வங்கியிடம் மாதத் தவணைத் தொகையை அதிகமாக செலுத்தும் வழியை கேட்டு விரைந்து கடனை அடைக்கும் சாத்தியக் கூறுகளை கண்டுபிடியுங்கள்.
  • மேற்கண்ட இரண்டும் சாத்தியமில்லை என்றபட்சத்தில், மாதம்தோறும் தொகையை உரியத் தொகையை தவறாமல் செலுத்தும்விதமாக தவணைக் காலத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

அத்துடன் இஎம்ஐ விவரங்களை கணக்கிட ஆன்லைனில் பல வழிகள் உள்ளன. அவற்றைக் கொண்டு முறையான புரிதலை கண்டடையுங்கள். வாடிக்கையாளர்கள் கடன் தவணைக் காலத்தை நீட்டிக்கும் போது அதற்கான வட்டித் தொகை தொடர்ச்சியாக உயரும் என்பது மட்டும் உறுதி. எனவே அண்மையில் கடன் பெற்று தவணை செலுத்தும் சூழலைக் கொண்டவர்கள் கடனை உரிய காலத்துக்குள் திரும்ப செலுத்துவதே நலம்.!

குறிப்பு: மேற்கண்டவை அனைத்தும் நிதி மேலாண்மை ஆலோசகர் சஞ்சித் கர்கின் தனிப்பட்ட கருத்தாகும். இந்த கருத்துகளுக்கு ஈடிவி பாரத் பொறுப்பேற்காது. நிதி மேலாண்மை தொடர்பான நிபுணர்களின் கருத்துகளை அறிய businessdesk@etvbharat.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

இதையும் படிங்க: சலுகைக் காலத்தில் வட்டி வசூலிக்கப்படுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

Last Updated : Jun 13, 2020, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.