ETV Bharat / business

ஓலா, உபரில் பயணிப்பவரா? இனி உங்களுக்கும் ஜிஎஸ்டிதான் - புத்தாண்டில் புது சுமை! - ஆன்லைன் ஆட்டோ புக்கிங் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி

ஆன்லைன் மூலம் வழங்கப்படும் ஆட்டோ சேவைகளுக்கு புத்தாண்டின் முதல் நாளிலிருந்து (2022 ஜனவரி 1) சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்துள்ளது மத்திய அரசு.

ஆன்லைன் ஆட்டோ புக்கிங் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி

author img

By

Published : Nov 28, 2021, 8:14 AM IST

டெல்லி: இதன்மூலம் ஓலா, உபர் மூலம் ஆட்டோ புக்கிங் செய்யும்போது ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரியை பயனாளிகள் செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய்த் துறை நவம்பர் 18ஆம் தேதி ஜிஎஸ்டி விலக்கு குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், "ஆன்லைன் மூலம் வழங்கப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு சலுகை திரும்ப ரத்துசெய்யப்பட்டது. அதே வேளையில், நேரடியாக ஆட்டோ ஓட்டுநர்களால் வழங்கப்படும் பயணிகள் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ஆட்டோ புக்கிங் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி
ஆன்லைன் ஆட்டோ புக்கிங் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி

இதனையடுத்து, ஓலா, உபர் மூலம் ஆட்டோ புக்கிங் செய்யும்போது ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரி பயனாளிகள் செலுத்த வேண்டும். இதன்மூலம் இனி ஆன்லைனில் புக் செய்யப்படும் ஆட்டோ கட்டணத்திற்கு ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரியை ஜனவரி 1ஆம் தேதிமுதல் பயனாளிகள் கொடுக்க வேண்டிவரும்.

ஆன்லைன் மூலம் ஆட்டோ சேவைகளை வழங்கும் இ-காமர்ஸ் தொழில் நிறுவனங்களில் வரும் ஜனவரி 1ஆம் தேதிமுதல் ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்க இருப்பதாக நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பு நடுத்தர மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

மேலும் இதில்கூடவா ஜிஎஸ்டி என வேதனை கேள்வி தொடுக்கும் சாமானியர், அப்படியே அந்த பெட்ரோல், டீசலுக்கும் சரக்கு - சேவை வரியை நிர்ணயித்தால் புண்ணியமா போகும் எனத் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: Maanaadu: பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.