ETV Bharat / business

ட்ரம்ப் பார்க்கப்போவது 'புதிய இந்தியா'வை - முகேஷ் அம்பானி கருத்து - முகேஷ் அம்பானி ட்ரம்ப்

மும்பை முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பார்த்ததில் இருந்து மாறுபட்ட புதிய இந்தியாவை டொனால்ட் ட்ரம்ப் பார்க்கப் போவதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Ambani
Ambani
author img

By

Published : Feb 24, 2020, 3:00 PM IST

அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் முதன்முறையாக டொனல்ட் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். ட்ரம்பின் வருகை இந்திய தொழில்துறையினரின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற முகேஷ் அம்பானி ட்ரம்பின் இந்திய வருகை குறிப்பிட்டு பேசினார். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்திய நாதெல்லாவுடன் உரையாடிய முகேஷ் அம்பானி, 'தொழில்நுட்ப புரட்சி இந்தியாவை பெரிதும் புரட்டிப் போட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்குப்பின் 38 கோடி பேர் டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளனர். இந்தியா உலகின் மூன்று பெரும் பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதற்கு முன்னர் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர்களான ஜிம்மி கார்டர், பில் கிளின்டன், ஒபாமா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

சத்திய நாதெல்லாவுடன் உரையாடும் முகேஷ் அம்பானி

ஆனால் அவர்கள் பார்த்த இந்தியாவில் இருந்து வேறுபட்ட புதிய இந்தியாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பார்க்கப் போகிறார். இதுவே தொழில்நுட்ப வளர்சியின் சாதனை' என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலகின் மிகப் பெரிய மைதானத்தில் உலகின் சக்திவாயந்த் நபர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.