சென்னை : சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கம் ரூ.12 குறைந்து விற்பனையாகிவருகிறது.
அடுத்துவரும் மாதங்களில் திருமணங்கள் அதிகம் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதற்கிடையில் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுக்க தங்கத்தின் விற்பனையும் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.12 சரிந்து ரூ.4 ஆயிரத்து 542 என விற்பனையாகிவருகிறது.
24 காரட் தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.4 ஆயிரத்து 896 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.39 ஆயிரத்து 168 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆக நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.18 குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் இந்த மாதத்தில் இல்லாதவகையில் அதிகபட்சமாக குறைந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராமுக்கு 1 ரூபாய் 10 காசுகள் குறைந்து கிலோ பார் வெள்ளி ரூ.73 ஆயிரத்து 200க்கு விற்பனையாகிறது. இதே விலை சரிவு நாட்டின் மற்ற நகரங்களிலும் காணப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4 ஆயிரத்து 542 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆடி பிறந்துள்ள நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துணிக்கடை போன்று தங்கக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதையும் படிங்க : உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன?