ETV Bharat / business

தீபாவளி விற்பனை - மகிழ்ச்சியில் ஜவுளி சந்தை வியாபாரிகள்! - தீபாவளி விற்பனை

ஈரோடு: ஊரடங்கால் நொடித்து போயிருந்த ஜவுளித்தொழில் தீபாவளி நெருங்கும் இவ்வேளையில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வேகமெடுத்துள்ளது. 40 ஆண்டுகள் பழமையான சிறப்புப்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை அதற்கு சான்றாக பண்டிகைக் கால விற்பனையில் மும்முரமாகியுள்ள்து. அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பு...

textile park
textile park
author img

By

Published : Nov 9, 2020, 5:35 PM IST

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ள கனி மார்க்கெட் ஜவுளி சந்தை, இந்தியளவில் மிகவும் பெயர்பெற்ற சந்தையாகும். 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஜவுளி சந்தை, வாரந்தோறும் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும். ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஜவுளி சந்தை கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் திறக்கப்பட்டது.

இங்கு ஜவுளி உற்பத்தியாளர்களே தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருவதால், காட்டன், ஆயத்த ஆடைகள், பெண்கள் ஆடைகள் என அனைத்து வகை ஜவுளி ரகங்களும் மிகவும் மலிவான விலையில் தரத்துடன் கிடைக்கின்றன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள், இங்கு வந்து ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்கின்றனர்.

தீபாவளி பண்டிகை விற்பனை - மகிழ்ச்சியில் ஜவுளி சந்தை வியாபாரிகள்!

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கனி மார்க்கெட்டில் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஊரடங்கால் கடும் பாதிப்படைந்த ஜவுளி விற்பனை, தீபாவளியை மட்டுமே நம்பியிருந்தது மோசம் போகவில்லையென்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பண்டிகைக்காலம் தொடங்கிய இரண்டு வாரங்களில் விற்பனை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாகவும், வெளியூர், உள்ளூர் வியாபாரிகளின் தொடர் வருகையால் மகிழ்ச்சியளிக்கும் தீபாவளியாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

கரோனா காலம் என்பதால் ஜவுளி ரகங்களின் விலை உயர்வாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், குறைவான விலையில் துணிகள் கிடைப்பதாக கூறுகின்றனர் பொதுமக்கள். அனைத்து வயதினருக்கான ஆடைகள், வீட்டிற்கு தேவையான துண்டு, போர்வை உள்ளிட்டவை நிறைய ரகங்களில் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி விற்பனை - மகிழ்ச்சியில் ஜவுளி சந்தை வியாபாரிகள்!

கடந்தாண்டுகளை விடவும் தரமான ஜவுளி ரகங்கள் யாரையும் பாதிக்காத வகையில் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: செங்கல் விலை வீழ்ச்சியால் மனமுடைந்த தொழிலாளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.