மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் டிசிஎஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட நான்கு லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
கரோனா பாதிப்பால் அனைத்து துறை நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ள நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தையும் அது விட்டுவைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். டிசிஎஸ் நிறுவனத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் சில ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்து வருகிறது அந்நிறுவனம்.
இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சரிவால் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலரான ராஜேஷ் கோபிநாதனின் ஊதியம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறையக்கூடும் என தெரிவித்துள்ளது. FY20 நிதி ஆண்டில் ராஜேஷ் கோபிநாதனின் ஊதியம் 16 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது, அதாவது கடந்த ஆண்டு அவர் வாங்கிய ஊதியமான 16.02 கோடி ரூபாயை விட இந்த ஆண்டு 13.3 கோடி ரூபாய் மட்டுமே வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆப்பிள் ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் ஆகுமெண்டட் ரியாலிட்டி செயலி குறித்த தகவல் கசிவு!