ETV Bharat / business

சூரத்தில் ரூ.8 ஆயிரம் கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு! - சூரத் டெக்ஸ்டைல்

கோவிட் பரவல் காரணமாக சூரத் ஜவுளித் துறையில் ரூ.8 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Surat Municipal Corporation சூரத் கரோனா கோவிட் பாதிப்பு இழப்பு சூரத் டெக்ஸ்டைல் சூரத் ஜவுளி

author img

By

Published : Mar 28, 2021, 3:44 PM IST

சூரத்: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையேயான காலக்கட்டத்தில் சூரத்தில் ஜவுளித் துறையில் ரூ.8,000 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில், தற்போது கோவிட் பரவல் அதிகரித்துவருவதால் இந்த வர்த்தகம் மீண்டும் பாதிப்படைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஏனெனில், சூரத் மாநகராட்சி விதித்த கட்டுப்பாடுகள் சந்தையில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பிற மாநிலங்களிலிருந்து ஜவுளி வாங்க சந்தைக்கு வரும் வர்த்தகர்கள் கட்டாய கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஏழு நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சந்தையில் வர்த்தகர்களின் வருகை கடுமையாக குறைந்துவிட்டது. இது வர்த்தகத்தை மேலும் மோசமாக்கியது. சூரத்தில் தினமும் இரண்டரை கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு வாரத்திலும் ரூ.250 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். இது குறித்து ஈடிவி பாரத் உடன் பேசிய ஃபோஸ்டா இயக்குனர் ரங்கநாத் ஷார்தா, கடந்த ஆண்டு லாக் டவுன் (பொது முடக்கம்) காலத்தில் வணிகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், வணிகம் புத்துயிர் பெற்று இந்தாண்டு ரூ.8,000 கோடி விற்றுமுதல் இருக்கும் என்று வர்த்தகர்கள் நம்பினர்.

இதற்கிடையில் தற்போது கோவிட் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவை ரத்து செய்துள்ளனர். பொதுவாக திருமண நிகழ்வுகளின் போது ரூ.6 ஆயிரம் கோடியும், ரமலான் மாதத்தில் ஆயிரம் கோடியும், அக்ஷய திரிதி காலத்தில் ரூ.200 கோடியும் உகாதி பண்டிகையின்போது ரூ.300 கோடியும் வர்த்தகம் நடைபெறும்” என்றார்.

இதற்கிடையில், சூரத்தைச் சேர்ந்த மற்றொரு ஜவுளி வர்த்தகர் ஸ்ரீகிருஷ்ணா பாங்கா ஈடிவி பாரதிடம், கடந்த வாரத்தில் சுமார் 400 லாரிகள் துணிகளை நகரத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தேன். இருப்பினும், இந்த வாரத்தில் 350 லாரிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. அடுத்தவாரம் இதற்கும் குறைவான லாரிகள் அனுப்பப்பட வாய்ப்புகள் உள்ளன. சூரத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வர்த்தகர்கள் தங்கள் கடைகளை ஏழு மணிக்கு மூடுமாறு காவலர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். இது ஒட்டுமொத்த வணிகத்தையும் பாதித்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: தயாநிதி மாறன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.