நீண்ட நாள்களாகவே இந்தியப் பங்குச்சந்தை தடுமாறிவரும் நிலையில், சீனாவில் வேகமாகப் பரவிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) நோய்த்தொற்று காரணமாக பங்குச்சந்தை மேலும் சரிவை சந்தித்துவருகிறது.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று தொடங்கிய பங்குச்சந்தையில், சென்செக்ஸில் உள்ள நிறுவன பங்குகள் சிறப்பாகச் செயல்படாததால் வர்த்தக முடிவின்போது சென்செக்ஸ் 806.89 புள்ளிகள் சரிந்து 40,363.23 எனவும், நிஃப்டி 251.45 புள்ளிகள் சரிந்து 11,829.40 எனவும் வர்த்தமாகியுள்ளது. மேலும் கடுமையான சரிவை சந்தித்த பங்குகளில் டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் முதலிடம்பிடித்துள்ளது.
சரிவை சந்தித்த பங்குகள்
- டைட்டன்
- மாருதி
- பார்தி ஏர்டெல்
- ஐசிஐசிஐ வங்கி
- ஹெச்.டி.எஃப்.சி.
சில நிறுவன பங்குகள் ஆறு விழுக்காடுக்கு மேல் சரிந்ததால், நாளை தொடங்கவிருக்கும் பங்குச்சந்தையில் பங்குதாரர்கள் கவனம் சென்செக்ஸ், நிஃப்டியில் உள்ளடக்காத பங்குகள் மீது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.