ETV Bharat / business

நிதிக்கட்டுப்பாடுகளின் பிடியில் மாநிலங்கள்!

ஹைதராபாத்: ஏற்கனவே 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்ட திட்டக்குழு முன்பு ஒருமுறை மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான வளங்களைப் சாத்தியமுள்ள வகையில் பகிர்ந்து கொள்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் முன்மொழிகிறது எனக் கூறியிருந்தது. 15ஆவது நிதிக்குழுவானது திட்டக்குழு சுட்டிக்காட்டியதை நிலைநிறுத்தியிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். திட்டக்குழு பயனற்றுப்போனதன் பின்னணியில், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய பொருளாதாரமானது சர்வதேச பெருந்தொற்றின் பின்னணியில் முழுவதுமாக நாசமாகிவிட்ட நிலையில் நிதிக்குழு அண்மையில் தமது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.

நிதிக்கட்டுப்பாடுகளின் பிடியில் மாநிலங்கள்!
நிதிக்கட்டுப்பாடுகளின் பிடியில் மாநிலங்கள்!
author img

By

Published : Feb 6, 2021, 6:37 AM IST

15ஆவது நிதிக்குழுவின் அறிக்கையில், கோவிட் தொற்று காலத்தில் நிதிக்குழு குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது. மோடி அரசு சுட்டிக்காட்டிய வரம்பு எல்லைக்குள், குறிப்பிட்ட புள்ளிகளுக்குள் அறிக்கையை முடித்து சமர்ப்பித்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நிதிக்குழு அறிக்கையை அளித்திருக்கிறது.

தென் மாநிலங்களில் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் ரூ.16,640 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தவறான அளவீட்டை அடிப்படையாகக் கொண்ட உள்ளீட்டின் காரணமாக 2021, 2026ஆம் ஆண்டுக்கு இடையே மாநிலங்களின் வருவாய் இழப்பு ரூ.94,000 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14ஆவது நிதிக்குழு 42 விழுக்காடு வளங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்தது. ஒதுக்கீடுகள் குறித்து பரிசீலனைசெய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிதிக்குழு, மாநிலங்களுக்கு 41 விழுக்காடு வளங்களைப் பகிர்ந்தளித்தது. ஒரு விழுக்காட்டை ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்தது. உண்மையில் 35 விழுக்காடு மட்டும்தான் கிடைக்கும் என்று உணர்ந்த மாநிலங்கள் 42 விழுக்காடு ஒதுக்கீட்டைக் கோரின. வளங்களைப் பிரித்தளிப்பதை 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கை கேளா செவியில் ஊதப்பட்ட சங்காக இருக்கிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து ரூ.52.41 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்கள் பெறும் என்று நிதிக்குழு கூறியது. இதற்கு மாறாக, ரூ.1.8 லட்சம் கோடி நிதியை மறு ஆய்வு செய்வதாகவும், கவனமாக சிந்தித்து முடிவை அறிவிப்பதாகவும் மத்திய அரசு கூறியது. இந்த மனப்பான்மை கூட்டாட்சித் தத்துவத்தின் ஆன்மாவுக்குப் பெரும் பின்னடைவாகும்.

இந்த இடத்தில் 2015ஆம் ஆண்டை நினைவுகூருவது பொருத்தமாக இருக்கும். "மாநிலங்கள் பெரும் நிதி வலுவுடனும், தன்னிச்சையாகவும் நிதி விவேகத்தையும், ஒழுக்கத்தையும் கவனிக்கும் வகையில் தங்கள் திட்டங்களைத் தீட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம். இது இல்லாமல் உள்ளூர் வளர்ச்சியின் தேவை பூர்த்தியடையாது. ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், பின்தங்கிய பகுதிகளைப் பிரதான நீரோட்டத்துக்குள் கொண்டுவர முடியாது என்று நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி அப்போது கூறினார்.

நிதி மற்றும் கடமைகளில் மாநிலங்கள், மத்திய அரசுக்கு இடையே நிலவும் கடுமையான ஏற்றத்தாழ்வு நிர்வகிக்கப்பட்டுவரும் நிலையில், நிதிக்குழு இது குறித்து கூறுகையில், அதிக செலவினங்களைக் கொண்ட பொறுப்புகளை மாநிலங்களுக்கு ஒப்படைப்பதற்கும், வளங்களைத் திரட்டுவதற்கும் மத்திய அரசுக்கு அரசியல் சட்டம் அதிகாரம் அளிப்பதாகக் கூறி இருக்கிறது. தவிர 62.7-க்கும் மேற்பட்ட நிதி வளங்களைக் கொண்ட மத்திய அரசு, 37.6 விழுக்காடு செலவினங்களுக்குப் பொறுப்புடமை கொண்டது என்றும், அதே நேரத்தில் வருமானத்தில் 37.6 பங்கு மட்டும் கொண்ட மாநிலங்கள் 62.4 விழுக்காடு செலவு செய்வதற்குப் பொறுப்புக்கொண்டது என்றும் நிதிக்குழு கூறியிருக்கிறது.

இதில் உள்ள இந்த உண்மைகளை முழுமையாகத் தெரிந்துகொண்ட நிலையில், ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த இந்திய நிதியிலிருந்து நிதியைப் பகிர்ந்தளிக்கும்படி மத்திய அரசு அழைப்புவிடுக்கிறது.

இந்தத் தலைப்புகளின்கீழ் மாநிலங்களும் செலவினங்களுக்கான சுமைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. அரசியல் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே மத்திய அரசின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நிதிக்குழு சொல்கிறது. எனினும் முன் எப்போதும் இல்லாத வகையில் முதன் முதலாக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் ஒரு விழுக்காட்டை நிதிக்குழு குறைத்திருக்கிறது.

அதனை ராணுவ செலவினங்களுக்காக ஒதுக்கிவைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் விவகாரமாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஒதுக்கீடுகள்கூட நிறுத்தப்பட்டன. இதுபோன்ற விவகாரங்களில் பொறுப்புடமைகளைப் பகிர்ந்துகொள்ள மத்திய அரசு ஏன் மறுக்கிறது என்பது தொடர்ந்து ஒரு மர்மமாகவே உள்ளது.

மத்திய அரசு மேலும், மேலும் அதிக செஸ்களை விதிக்கிறது. இதிலிருந்து எதையும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கத் தேவையில்லை. அதிக நிதி ஒதுக்குமாறு மாநிலங்களின் கோரிக்கையையும் இது ஒதுக்கிவைக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு ஆதரவு அளிக்கும் திட்டங்களின் எண்ணிக்கை 30 லிருந்து 35 ஆக அதிகரித்திருக்கிறது.

தவிர மத்திய அரசின் திட்டங்களின் எண்ணிக்கையையும் 685 லிருந்து 704 ஆக உயர்ந்துவிட்டது. ஜிஎஸ்டியின் வருகையால், வரி வருவாய் தொடர்பான மாநிலங்களின் அதிகார வரம்புகள் வெகுவாகச் சுருங்கிவிட்டன. நிதிக்காக மத்திய அரசிடம் மண்டியிடுவதைத் தவிர மாநிலங்களுக்கு இதர வேறு வாய்ப்புகள் ஏதும் இல்லை. வழக்கம்போல, 15ஆவது நிதிக்குழுவும்கூட இந்தச் சூழலில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.

இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம் குறித்து அமெரிக்கா கருத்து: வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.