கரோனா பரவல் காரணமாக நாட்டின் வேலைவாய்ப்பு விகிதமும் பொருளாதார நடவடிக்கைகளும் பெரும் முடக்கத்தைக் கண்ட நிலையில், சேவைத் துறை தற்போது முன்னேற்றத்தை காணத் தொடங்கியுள்ளது.
சேவைத் துறை நடவடிக்கை தொடர்பான புள்ளி விவரங்களை தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் சேவைத் துறை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
ஜூலை மாதத்தில் 34.2ஆக இருந்த வர்த்தக நடவடிக்கைகள் குறித்த குறியீடு, ஆகஸ்ட் மாதம் 41.8ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள மூத்த பொருளாதார நிபுணர் ஸ்ரீயா பட்டேல், ”ஆகஸ்ட் மாதம் சவால்களை எதிர்கொண்டுவந்த சேவைத் துறை, தற்போது முன்னேறி வருகிறது.
லாக்டவுன் நெருக்கடியையும் தாண்டி உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகச் சந்தை சூழல், சேவைத் துறையில் ஆக்கப்பூர்வமான உயர்வை சந்தித்துள்ளது. தளர்வுகள் மெல்ல அதிகரிக்கும்போது இது மேலும் உயரும்” என்றார்.
வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் துறைகள் கடந்த இரு மாதங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு