சீனாவில் வேகமாகப் பரவிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) நோய்த்தொற்று காரணமாக வர்த்தக உலகம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துவருகிறது. இதற்கு இந்திய பங்குச்சந்தைகள் மட்டும் விதிவிலக்கா என்ன? கொரோனாவின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 392.24 புள்ளிகள் சரிந்து 39,888.96 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119.40 புள்ளிகள் சரிந்து 11,678.50 எனவும் வர்த்தகமாகியுள்ளது.
அதிக லாபத்தை வழங்கிய பங்குகள்
- ஏசியன் பெயிண்ட்ஸ்
- அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ்
- பாரத ஸ்டேட் வங்கி
- ஹெச்.சி.எல். டெக்
சரிவைச் சந்தித்த பங்குகள்
- மாருதி
- ஹீரோ மோட்டோகார்ப்
- இன்போசிஸ்
- ஓ.என்.ஜி.சி.
மேலும் நாளை தொடங்கும் பங்குச்சந்தையிலும் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிய வாய்ப்புள்ளதாக பங்குத்தரகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 12.67 லட்சம் புதிய வேலை டிசம்பரில் உருவாக்கப்பட்டது: ESIC ஊதிய தரவு