மும்பை: புதன்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தை 19.06 புள்ளிகள் வீழ்ந்து 51,309.39 புள்ளிகள் என வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 2.80 (0.002) புள்ளிகள் வீழ்ச்சிகண்டு 15,106.50 என வர்த்தகத்தை நிறைவுசெய்தது. பங்குகளை பொறுத்தமட்டில் சிப்லா, பஜாஜ்பின்சர்வ், எஸ்பிஐ லைப், ஹெச்டிஎஃப்சி லைப் மற்றும் எம்அண்ட் எம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும் பார்திஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், பிரிடானியா நிறுவன பங்குகள் நஷ்டத்திலும் வர்த்தமாகின.
மும்பை பங்கு சந்தையில் மாருதி, பவர்கிரிட், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராசெம்கோ, இண்டஸ்வங்கி, ஐடிசி நிறுவன பங்குகள் இழப்பிலும், பஜாஜ் பின்சர்வ், எம்அண்ட்எம், பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் லாபத்திலும் வர்த்தமாகின.
இதையும் படிங்க: ரிசர்வ் வங்கி கொள்கை எதிரொலி - பச்சை வண்ணத்தில் மிளிர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!