ETV Bharat / business

நிதி திரட்ட பங்குகளை விற்கும் இந்திய வங்கிகள்!

டெல்லி: நாட்டிலுள்ள ஐந்து பெரிய வங்கிகள் நிதி திரட்டுவதற்காக தங்கள் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளன.

author img

By

Published : Aug 25, 2020, 3:00 PM IST

SBI, PNB, BoB may go for share sale this fiscal

கரோனா பரவல் காரணமாக பல்வேறு துறைகளிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வங்கிகளில் கடன் பெற்ற நிறுவனங்கள் கடனை திருப்ப செலுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இதன் காரணமாக வங்கிகளும் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழலில் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையைக் கருத்தில்கொண்டு, நாட்டிலுள்ள ஐந்து முக்கிய வங்கிகள் தங்கள் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளன.

அதன்படி எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கி ஆகியவை மூன்று அல்லது நான்காம் நிதியாண்டில், குறிப்பிட்ட அளவு தங்கள் பங்குகளை முதலீட்டாளர்களிடம் விற்க முடிவு செய்துள்ளன. அக்டோபர் இறுதி வாரத்தில் வராக்கடன் குறித்த தெளிவான நிலை வங்கிகளுக்கு தெரியவரும் என்பதால், அதன் பின் பங்குகள் விற்கும் பணிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டக் மஹேந்திரா வங்கி உள்ளிட்ட தனியார் துறை வங்கிகள் கடந்த மூன்று மாதங்களில் ஏற்கனவே இதேபோன்ற பங்குகள் விற்பனை மூலம் நிதி திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி எஸ்பிஐயின் பங்குதாரர்கள் ரூ .20,000 கோடியை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளனர். அதே நேரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ .7,000 கோடியை திரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

மேலும், பரோடா வங்கி, யூனியன் வங்கி ஆகியவையும் முறையே ரூ. 9,000 கோடி மற்றும் ரூ. 6,800 கேடியை திரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: உலகின் டாப் 100 வங்கிகள் - இந்தியா பிடித்திருப்பது ஒரே ஒரு இடம் தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.