இந்தியாவில் கரோனா ஊரடங்கிற்கு பிறகு ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சாம்சங் நிறுவனத்தின் அக்டோபர் மாதத்திற்கான ஸ்மார்ட்போன் விற்பனை 32 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இது குறித்து சாம்சங் நிறுவத்தின் துணைத் தலைவர் ராஜு புல்லன் கூறுகையில், "அக்டோபர் மாதம், எங்கள் நிறுவனத்தின் ப்ரீமியம் செக்மென்ட் ஸ்மார்ட்போன் விற்பனை சுமார் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஸ்மார்ட்போன் விற்பனை 32 விழுக்காடு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ப்ரீமியம் செக்மென்ட் ஸ்மார்ட்போன் விற்பனை டையர் 2 மற்றும் டையர் 3 நகரங்களில் 36 மற்றும் 68 விழுக்காடு அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதம் சாம்சங் பதிவு செய்த அதிகபட்ச விற்பனை இதுதான்" என்றார்.
மேலும், சாம்சங் நிறுவனத்தின் தொலைக்காட்சி, ப்ரீட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரும் முதலீட்டுடன் தெலங்கானாவில் கால்பதிக்கும் அமேசான் வெப் சர்வீசஸ்!