2019ஆம் நிதியாண்டில் இருக்கும் ஒட்டுமொத்த வாராக்கடன் ரூபாய் 8 லட்சத்து 79 ஆயிரம் கோடியில் சுமார் 12.4 விழுக்காடு, அதாவது 1.1 லட்சம் கோடி வாராக்கடன் விவசாயக் கடன்களால் ஆனது என்று எஸ்பிஐ ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 2016ஆம் நிதியாண்டில் இருந்த ஒட்டுமொத்த வாராக்டன் 5,66,620 கோடியில் வெறும் 8.6 விழுக்காடாக (ரூபாய் 48,800 கோடி) இருந்தது.
இவை அனைத்தும் அரசு அவ்வப்போது அறிவித்த கடன் தள்ளுபடிகளை உள்ளடக்கியது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மத்திய, மாநில அரசுகள் சுமார் 4.2 லட்சம் கோடி ரூபாய்யை தள்ளுபடி செய்தது. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு செய்த 50 ஆயிரம் கோடி ரூபாய்யை சேர்த்தால், இது 4.7 லட்சம் கோடியாக உயரும். இவை பெருந்தொழில் நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள வாராக்கடன்களில் 82 விழுக்காடு ஆகும்.
மாநில வாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன்
மாநிலம் | நிதியாண்டு | தள்ளுபடி செய்யப்பட்ட கடன் |
ஆந்திரா | 2015 | 24 ஆயிரம் கோடி |
தெலங்கானா | 2015 | 17 ஆயிரம் கோடி |
தமிழ்நாடு | 2017 | 5,280 கோடி |
மகாராஷ்டிரா | 2018 | 34,020 கோடி |
உத்தரப் பிரதேசம் | 2018 | 36,360 கோடி |
பஞ்சாப் | 2018 | 10 ஆயிரம் கோடி |
கர்நாடகா | 2018 | 18 ஆயிரம் கோடி |
கர்நாடகா | 2019 | 44 ஆயிரம் கோடி |
ராஜஸ்தான் | 2019 | 18 ஆயிரம் கோடி |
மத்திய பிரதேசம் | 2019 | 36 ஆயிரத்து 500 கோடி |
சத்தீஸ்கர் | 2019 | 6 ஆயிரத்து 100 கோடி |
மகாராஷ்டிரா | 2019 | 45 முதல் 51 ஆயிரம் கோடி |
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அரசின் விவசாயக் கடன் தள்ளுபடிகள் அனைத்தும் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடியில் வெறும் 60 விழுக்காடு மட்டுமே உண்மையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக மத்திய பிரதேசத்தில் வெறும் 10 விழுக்காடு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஆண்டுகளில் அனைத்தும் புதிதாக வழங்கப்படும் விவசாயக் கடன் அளவும் பெருவாரியாக குறைந்துள்ளது. 2018ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிராவில் 2018ஆம் ஆண்டைவிட 40 விழுக்காடு குறைவாகவே விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, பஞ்சாப்பிலும் இதே நிலைதான்.
சமீப ஆண்டுகளில் விவசாயிகள் கடன் அட்டை (Kissan Credit Card) மூலம் விவசயிகள் கடன் பெறுவது அதிகரித்துள்ளது. குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுவதும், கடன்களை உரிய நேரத்தில் திருப்பச் செலுத்தினால் வழங்கப்படும் 5 விழுக்காடு ஊக்கத் தொகையுமே இதற்கு காரணம்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாத கணக்கின்படி வழங்கப்பட்ட ஒட்டுமொத்த விவசாயக் கடனில் சுமார் 70 விழுக்காடு விவசாயிகள் கடன் அட்டை மூலம் பெறப்படுகிறது. நம் நாட்டிலுள்ள 70 விழுக்காடு விவசாய நிலங்களில், குத்தகைதாரர்களே விவசாயம் செய்யகின்றனர். இதனால் அரசின் பெரும்பாலான நலத்திட்டங்கள் தேவையானவர்களைச் சென்றடைவதில்லை.
இதையும் படிங்க: புல்வாமாவில் அதிகாலைத் துப்பாக்கிச் சூடு: மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!