ETV Bharat / business

கரோனா தொற்று: உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்திற்கு ஐந்தாண்டு சம்பளம்: ரிலையன்ஸ் அறிவிப்பு!

கரோனா தொற்றால் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சம் உதவித்தொகை, ஐந்தாண்டு சம்பளம் வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Reliance
Reliance
author img

By

Published : Jun 3, 2021, 11:37 PM IST

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் எதிர்பாரத அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, குடும்பத்தில் சம்பளதாரர்கள் உயிரிழக்கும் அவலம் ஏற்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

இந்த மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு தனது நிறுவனத்தின் ஊழியர்களின் குடும்ப நலன் காக்க ரிலையன்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தனது நிறுவன ஊழியர் கோவிட்-19 தொற்றால் உயிரிழக்கும்பட்சதில், அந்த நபர் கடைசியாக வாங்கிய சம்பளத்தை அவரது குடும்பத்தினருக்கு, ஐந்தாண்டு காலத்திற்கு மாதம் தோறும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்த நபர்களின் குழந்தைகளுக்கு, அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை கல்விச் செலவுகள் அனைத்தையும் நிறுவனமே ஏற்கும், அந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: ஆண்டு சம்பளத்தை உதறிய முகேஷ் அம்பானி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.