மும்பை: ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர்களின் கூட்டம் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று (மே.21) காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2020 ஜூலை மாதம் முதல் 2021 மார்ச் வரையிலான ரிசர்வ் வங்கியின் அறிக்கை, கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசிற்கு கடந்த நிதியாண்டின் (ஜூலை- மார்ச்) ஒன்பது மாத காலத்திற்கு 99,122 கோடி ரூபாய் உபரி நிதி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு, உலகப் பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய உபரி நிதி விபரம்
2019-20ஆம் ஆண்டிற்கு 57,128 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி உபரி நிதியாக வழங்கியிருந்தது. அதுபோல, 2018-19ஆம் ஆண்டிற்கு உபரிநிதியாக 1.76 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதுவே பிரதமர் மோடி பதவியேற்ற பின்பு வழங்கப்பட்ட அதிகபட்ச உபரி நிதியாகும். மேலும், 2017-18ஆம் ஆண்டிற்கு உபரி நிதியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: வருமானவரி தாக்கல்: அவகாசம் நீட்டிப்பு