ETV Bharat / business

கரோனாவுக்கு பின் பொருளாதாரத்தை சீரமைக்க என்ன தேவை!

author img

By

Published : May 1, 2020, 2:41 PM IST

டெல்லி: கோவிட்-19 நெருக்கடி நிலைக்குப் பின் நுகர்வோர்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே எந்தெந்தத் துறைகள் வளர்ச்சியைச் சந்திக்கும் என்பது தெரியும் என்று டன் & பிராட் ஸ்ட்ரீட் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

Period of lockdown
Period of lockdown

கோவிட்-19 பரவலைத் தடுக்க பல நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கு காலத்தில் பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், கரோனா நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளாதாரத்தைக் கட்டமைக்க ஊரடங்கு காலம், சர்வதேச மந்தநிலை, நுகர்வோர் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் முக்கியமானதாக இருக்கும் என்று டன் & பிராட் ஸ்ட்ரீட் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இது குறித்து டன் & பிராட் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் அருண் சிங் கூறுகையில், "பல்வேறு நாடுகளும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் திட்டங்களை அறிவித்துவருகின்றன. இதன்மூலம் பொருளாதாரத்தை எவ்வளவு தூரம் மீட்டெடுக்க முடிகிறது, வருமான சமத்துவமின்மை எவ்வளவு தூரம் குறைகிறது, உற்பத்தித் திறன் எவ்வளவு தூரம் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நெருக்கடி நிலைக்குப் பின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தக் காரணிகள் உதவும்.

ஊரடங்கு காரணமாக அனைத்து அத்தியாவசியமற்ற செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. மக்கள் நடமாட்டம் பெருமளவு முடங்கியுள்ளதால் தொழில் துறை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

இது தவிர சர்வதேச அளவிலும் தேவைகள் குறைந்துள்ளதால் சர்வதேச சந்தை சரிவைச் சந்தித்துள்ளது. பொதுமக்கள், பெருநிறுவனங்களின் சேமிப்பு குறைந்து கடன் அதிகரித்துவருவதை இது காட்டுகிறது. வரும் காலத்தில் இது ஒரு பெரும் நெருக்கடியை உருவாக்கும்.

இதனால் கடன் பெற்றவர்கள் வங்கிகளுக்குக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகி அவை வாராக்கடனாகும். இதன்மூலம் வங்கித் துறையும் புதிய சவால்களைச் சந்திக்கும்.

இது ஒரு தொடர் நிகழ்வாகப் பொதுமக்களின் வருவாயைக் குறைக்கும். இது இந்தியா உள்பட உலக நாடுகளில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: கனரக ஆலைகள் இயங்குவது எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.