மகாராஷ்டிர தலைநகர் மும்பையிலுள்ள ஐஐடி கல்வி நிறுவனம் நடத்திய தொழில்நுட்பக் கருத்தரங்கில், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு தனது யோசனைகளை முன்வைத்தார்.
இந்தியாவின் 58 விழுக்காடு மக்கள் வேளாண் துறையைச் சார்ந்துள்ளதாகவும், ஆனால் அதன் மூலம் நாட்டிற்கான வருவாய் 14 விழுக்காடு மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவித்தார். விவசாயம் சார்ந்த துறைகளின் வருவாய் மிகக்குறைவாகக் கிடைப்பதே நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முக்கியக் காரணம் என நாராயண மூர்த்தி கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வறுமையை நீக்கி வருவாயை உயர்த்த அதிக வருமானம் உள்ள உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும், இதன்மூலம் அடுத்த 10-15 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றத்தாழ்வை வெகுவாகக் குறைக்கலாம் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவின் டீ ஏற்றுமதிக்கு அடி!