நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ.) புதிய அம்சங்களுடன் ரூபே தொடர்பு இல்லா பணப்பணிவர்த்தனையை பலப்படுத்தியுள்ளது.
போர்க்கால அடிப்படையில் சில்லறை கொடுப்பனவுகளுக்காக ரூபே தொடர்பு இல்லா (ஆஃப்லைன்) அம்சத்தை தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ.) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கூடுதல் அம்சங்கள் ரூபே அட்டைதாரர்களுக்கான ஒட்டுமொத்த பரிவர்த்தனைகள் அதிகரிப்பதோடு, பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி வாடிக்கையார்களை நகர்த்துவதில் முன்னேற்றம் ஏற்படும் என்று தேசிய கொடுப்பனவு கழகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் ஆளாகாமல் விரைவான மற்றும் தடையற்ற பரிவர்த்தனைகளை உறுதிசெய்து பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
மெட்ரோக்கள், பேருந்து கட்டணச்சீட்டுகள், சீருந்து (கேப்) கட்டணங்கள் உள்ளிட்ட போக்குவரத்தில் டிக்கெட் செலுத்துவதற்குப் ரூபே என்.சி.எம்.சி. (நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு) பயன்படுத்தலாம். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம், போக்குவரத்து நேரம் குறையும். இந்தப் பரிவர்த்தனைகள் வழக்கமான அட்டை பரிவர்த்தனையைவிட வேகமானதாகச் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன், சில்லறை ஆஃப்லைன் பரிவர்த்தனைகளில் கூடுதலாக, சில்லறை கடைகளுக்கு ஆஃப்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி நீட்டிக்கப்படுகிறது. இணைய இணைப்பு இல்லாமை அல்லது இணையத்தின் குறைந்த வேகம், தொலைதூரப் பகுதிகள் உள்ளிட்டவைகளில் பொதுவாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, ஆஃப்லைன் கொடுப்பனவுகளுக்கான சேவையை தேசிய கொடுப்பனவு கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி வணிகர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும், ஏனெனில் இது பணம் செலுத்துவதற்கான நேரத்தை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள எளிதான ஏற்றுக்கொள்ளல் உள்கட்டமைப்பு வசதிகள், மோசமான நெட்வொர்க் கவரேஜ் பகுதிகளில் சுமுகமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகுக்கின்றன.
தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ.) 2008ஆம் ஆண்டில் இந்தியாவில் சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகளை இயக்குவதற்கான அமைப்பாக இணைக்கப்பட்டது. என்.பி.சி.ஐ. நாட்டில் ஒரு வலுவான கட்டணம் மற்றும் தீர்வு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ரூபே அட்டை, உடனடி கொடுப்பனவு சேவை (ஐ.எம்.பி.எஸ்.), பி.எச்.ஐ.எம். ஆதார், தேசிய மின்னணு கட்டணங்கள் போன்ற சில்லறை கட்டண தயாரிப்புகளின் மூலம் இந்தியாவில் பணம் செலுத்தும் முறையை இது மாற்றியுள்ளது. நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் விரிவான சேவைகளை வழங்க என்.பி.சி.ஐ. யுபிஐ 2.0-ஐ அறிமுகப்படுத்தியது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சில்லறை கட்டண முறைகளில் புதுமைகளைக் கொண்டுவருவதில் என்.பி.சி.ஐய கவனம் செலுத்துகிறது, மேலும் இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் இடைவிடாமல் செயல்பட்டுவருகிறது.
முழுமையான டிஜிட்டல் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை மேம்படுத்துவதற்காக குறைந்த செலவில் நாடு தழுவிய அணுகலுடன் பாதுகாப்பான கட்டணத் தீர்வுகளை தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ.) எளிதாக்கிவருகிறது. 1 ஜனவரி 2021 முதல் தொடர்பு இல்லா டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் கட்டணங்கள் தொடர்பான விதிமுறைகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உச்சம் நோக்கி பயணிக்கும் இந்திய பங்குச்சந்தைகள்