ETV Bharat / business

பாகிஸ்தானுக்கு கடனும் இல்லை; எண்ணெய்யும் இல்லை: கைவிரித்த சவூதி அரேபியா - சவுதி அரேபியா பாகிஸ்தான் மோதல்

காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளை இந்தியாவிற்கு எதிராக திருப்ப பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால், சவூதி இதற்கு செவி சாய்க்காததால், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி, சில சர்ச்சைக் கருத்துகளை பொதுவெளியில் பதிவுசெய்தார். அது மிரட்டும் தொனியில் இருந்ததால், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த சலுகைகளை சவூதி அரசு நிறுத்தியுள்ளது.

saudi arabia pakistan
saudi arabia pakistan
author img

By

Published : Aug 12, 2020, 6:11 PM IST

ரியாத்: கடன் மற்றும் கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதன் மூலம் பாகிஸ்தானுடனான பல ஆண்டுகால உறவை சவூதி அரேபியா முறித்துக்கொண்டிருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டுடன் 6.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி, பணம் பெற்றுக்கொள்ளாமல் 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கச்சா எண்ணெய் விநியோகம், 3 பில்லியன் டாலர்கள் கடன் வசதியை பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சவூதி அரேபியா அளிக்கும். அதன்படி 3 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு சவூதி வழங்கியிருந்தது. மேலும் கச்சா எண்ணெயையும் வழங்கி வந்தது.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமிழச்சி கமலா ஹாரிஸ் !

இந்த ஒப்பந்தத்தை ஆண்டுக்கு ஒரு முறை நீட்டிக்க வேண்டும். இச்சூழலில் 2020 மே மாதம், இந்த ஒப்பந்தம் காலாவதியானது. பாகிஸ்தானின் விடாமுயற்சிக்குப் பிறகும் சவூதி, இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்காததுடன், ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த 3 பில்லியன் டாலர் பணத்தைத் திருப்பியளிக்கவும் நிர்பந்தப்படுத்தியது.

இதனடிப்படையில் முதல்கட்டமாக ஒரு பில்லியன் டாலர் பணத்தை சவூதிக்கு பாகிஸ்தான் அரசு திருப்பி செலுத்தியுள்ளது. இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான விரிசல் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை 2019ஆம் ஆண்டு, இந்திய அரசு ரத்து செய்ததுடன் அம்மாநிலத்தை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதன் காரணமாக இந்தியா மீது பாகிஸ்தான் வெறுப்புணர்வில் இருந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளை இந்தியாவிற்கு எதிராக, திருப்ப பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக 57 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organisation of Islamic Cooperation) கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

இந்த அமைப்பின் தலைமையில் இருக்கும் சவூதி அரேபியா, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்காமல் கூட்டத்தைக் கூட்ட மறுப்புத் தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் சவூதி தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என எண்ணிய பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

டிக்டாக்கை வாங்க களமிறங்கிய ட்விட்டர்!

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி அளித்த நேர்காணல் ஒன்றில் சவூதி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

'காஷ்மீர் விவகாரத்தில் சவூதி அரேபியா எங்களுக்கு ஆதரவாக இல்லை என்றால், இவ்விவகாரத்தில் எங்களுக்குத் தோள் கொடுக்கும் இஸ்லாமிய நாடுகளுடன் ஒரு கூட்டத்தைப் பாகிஸ்தான் கூட்டும்' என அவர் கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சரின் இக்கருத்து சவூதி அரேபியாவை மிரட்டும் தொனியில் இருந்ததால், அந்நாடு தற்போது பாகிஸ்தானுடனான உறவை முறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே 6.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தையும் சவூதி ரத்து செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாகவே பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வரும் சீனா கூட, மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் தலையிட விரும்பாமல் ஒதுங்கியிருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.