கரோனா-19 பாதிப்பையடுத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இது தொடர்பான தனியார் சந்தை நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 70 விழுக்காடு ஆன்லைன் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மொபைல் அப்ளிகேஷன் பயன்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் தங்களது அப்ளிகேஷன் பயன்பாடு குறித்து சர்வே நடத்தப்பட்டது. அதில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் செயலிதான் சிறந்த அம்சங்களுடன் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியின் செயலி மட்டும்தான் அனைத்து அம்சங்களிலும் சமமான முக்கியத்துவத்தை தந்து சிறப்பான பயன்பாட்டு முறையைக் கொண்டுள்ளது. அதேவேளை, ஆக்ஸிஸ், ஹெச்.டி.எஃப்.சி., கோடக் மஹிந்திரா, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய வங்கி செயலிகள் தங்களது தரம், சேவையை மேம்படுத்த வேண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தற்காலிகமாக சருமத்தில் தோன்றும் பழுப்பு நிறப் புள்ளிகள்! என்ன செய்யலாம்