ETV Bharat / business

கார் பிரியர்களுக்குச் சோக செய்தி - 3ஆவது முறையாக மாருதி சுசூகி வாகனங்கள் விலை உயர்வு - Maruti Suzuki

மூலப் பொருள்களின் விலை உயர்வால் மாருதி சுசூகி வாகனங்களின் விலை 1.9 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், விலை குறைவான கார்கள் வரிசையில் இருக்கும் செலெரியோவின் விலையில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Maruti Suzuki hikes vehicle prices, Maruti Suzuki, மாருதி சுசூகி, மாருதி கார் விலை அதிகரிப்பு, மாருதி கார் விலை, மாருதி கார், விலையேற்றம், Maruti Suzuki, செலெரியோ
Maruti Suzuki hikes vehicle prices
author img

By

Published : Sep 6, 2021, 7:03 PM IST

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.

நிறுவனத்தின் அறிக்கையின்படி, டெல்லி விற்பனை நிலைய விலையிலிருந்து 1.9 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நடுத்தர மக்கள் அதிகம் விரும்பும் செலெரியோ மாடல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடரும் விலையேற்றம்

இந்த ஆண்டில், மூன்றாவது முறையாக தங்கள் நிறுவன வாகனங்களின் விலையை மாருதி சுசூகி உயர்த்தியுள்ளது. மொத்தமாக ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 3.5 விழுக்காடு அளவுக்கு கார் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி நிறுவனமானது, குறைந்த விலை ஆல்டோ கார் முதல் பிரீமியம் எஸ் கிராஸ் வரை, ரூ.2.99 லட்சம் முதல் ரூ.12.39 லட்சம் வரை விற்பனை செய்துவருகிறது.

உயர்ந்துவரும் மூலப் பொருள்கள் விலை

காரில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பின் காரணமாகவே, கார் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.38ஆக இருந்த ஸ்டீல் விலை தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல தாமிரம் விலை டன்னுக்கு 5,200 டாலரிலிருந்து இருமடங்காக உயர்ந்து 10,000 டாலராக உள்ளது.

ரோடியம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும், மே 2020இல் ஒரு கிராம் ரூ. 18,000 என்ற விலையில் இருந்து ரூ. 64,300 ஆக அதிகரித்துள்ளது.

எனவே தவிர்க்க முடியாத காரணத்தினால் மட்டுமே நிறுவன கார்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.