ETV Bharat / business

பங்குச்சந்தையில் ஆட்டம் கண்ட பேஸ்புக் நிறுவனம் - அம்பானி, அதானியை விட கீழே இறங்கிய மார்க்!

பங்குச்சந்தையில் பேஸ்புக் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைக் கண்ட நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு வெகுவாகக் குறைந்தது.

Facebook stock
Facebook stock
author img

By

Published : Feb 4, 2022, 12:28 PM IST

Updated : Feb 4, 2022, 2:47 PM IST

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் நேற்று சுமார் 25 விழுக்காடு சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தனது சந்தை மதிப்பில் 230 பில்லியன் டாலர் தொகையை அது இழந்துள்ளது.

இந்த கடும் வீழ்ச்சியின் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் சுமார் 23.34 விழுக்காடு குறைந்துள்ளது. பேர்ப்ஸ் பத்திரிகையின் புள்ளி விவரப்படி, இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானியைக்கு குறைவாக சொத்து மதிப்பு கொண்டவராக மார்க் சக்கர்பெர்க் கீழே சரிந்துள்ளார். உலகளவில் மார்க் தற்போது 12ஆவது இடத்தில் உள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் அன்மையில் நிர்வாக ரீதியாக தனது பெயரை மெட்டா(Meta) என்று மாற்றிக்கொண்டது. இந்தசூழலில், கடந்த காலாண்டில் பேஸ்புக் சமூக வலைத்தளப் பயனாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாக புள்ளி விவரம் வெளியானது. அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசிய என அனைத்து பிராந்தியங்களிலும் பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களை இழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த செய்தியின் தாக்கம் காரணமாக சந்தையில் பெரும் இழப்பை பேஸ்புக் சந்தித்துள்ளது.

அதேவேளை, பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மெட்வெர்ஸ் எனப்படும் மெய்நிகர் 3டி தொழில்நுட்பத்தில் தனது எதிர்கால முதலீட்டை மேற்கொண்டுவருகிறது.

இதையும் படிங்க: வீடியோ கேம் டெவலப்பர் பங்கியை வாங்கிய சோனி பிளேஸ்டேஷன்

Last Updated : Feb 4, 2022, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.