ETV Bharat / business

'விசைத்தறித்தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ரூ.162 கோடி நிவாரணம்' - கர்நாடக அரசு - karnataka government relief package for weavers

பெங்களூரு: கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட விசைத்தறித் தொழிலாளர்கள், காய்கறி, பழ விவசாயிகள் உள்ளிட்ட சிலருக்கு 162 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

relief packages by Karnataka government
relief packages by Karnataka government
author img

By

Published : May 15, 2020, 8:03 PM IST

கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கரோனா பாதிப்பால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்தது.

அதன்படி விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி, பழ விவசாயிகள் உட்பட சிலருக்கு 162 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி (Law and Parliamentary Affairs Minister J C Madhuswamy), 'கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு 2,000 ரூபாய் வழங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு முறை நிவாரணமாக 2,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மேலும் இதற்கு 25 கோடி ரூபாய் செலவாகும் என்றும், காய்கறி, பழ விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குவதால் அரசுக்குக் கூடுதலாக 162 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டங்களுக்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.