இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம், "வாடிக்கையாளர்களுக்கு தங்க நகை, தங்கப் பத்திரம் ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனி நகைக் கடன்களுக்கு 7.30% வட்டி விதிக்கப்படும். அதேபோல தங்கப் பத்திரத்தை வைத்து பெறும் கடனுக்கு 7.20% வட்டி விதிக்கப்படும். இதையடுத்து வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வீட்டுக் கடன் வட்டி 6.60% இருந்தும், வாகன கடன் வட்டி 7.15% இருந்தும், தனிநபர் கடன் வட்டி 8.95% இருந்தும் தொடங்குகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன் 8.6 விழுக்காடு வட்டி