தொடர்ந்து ஆறு நாட்களாக சிறப்பாக செயல்பட்ட பங்குச்சந்தை, நேற்று முடிவின்பொது சரிவைச் சந்தித்தது. இதனை தொடர்ந்து இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் 10 மணி அளவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயந்து 38987.23 எனவும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.95 புள்ளிகள் சரிந்து 11582.40 எனவும் வர்த்தமாகின.
இந்நிலையில் விசில் ப்ளோவர் குற்றச்சாட்டுக்குப் பிறகு நேற்று 17 விழுக்காடு சரிவடைந்த இன்ஃபோசிஸ் பங்குகள், இன்று தொடக்கத்திலேயே 3 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது.
மேலும் டாடா மோட்டார்ஸ், எஸ் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் போன்ற பங்குகள் சரிவைச் சந்திக்கும் நிலையில் ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, பவர் கிரீட் போன்ற பங்குகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: 335 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!