பெங்களூருவைத் தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், கடந்த சில மாதங்களாகவே பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. விசில்ப்ளோவர் குற்றச்சாட்டு, ஊழியர்களுக்கு விசா வழங்கியதில் ஊழல் என சிக்கல்களைச் சந்திக்கும் இன்ஃபோசிஸ், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளது.
அதாவது இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், "அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து பொதுவெளியில் தும்முவோம் என்றும், அதன் மூலம் இந்தக் கொடிய கரோனா வைரஸ் தொற்றை அனைவருக்கும் பரப்புவோம்" என பேசியுள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் சூழலில், இன்ஃபோசிஸ் நிறுவனம் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்ததோடு, இது மாதிரியான பேச்சுக்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இ.எம்.ஐ., 3 மாதம் நிறுத்திவைப்பு: கிரெடிட் கார்டுக்கு பொருந்துமா?