2020 கர்னி அந்நிய நேரடி முதலீட்டு வெளியிட்டு அறிக்கையில், இந்த ஆண்டும் இந்தியா வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இல்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும் 2019ஆம் ஆண்டில், அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா 16ஆவது இடத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
அந்நிய நேரடி முதலீட்டில் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக அமெரிக்கா முதலிடத்தில் இருந்துவருகிறது. அனைத்து நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் சூழலில், அமெரிக்கா மட்டும் 'நம்பர் 1' ஆக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டை விட 2020ஆம் ஆண்டின் குறியீட்டில், அமெரிக்காவின் சந்தைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் ஜப்பான் நான்காவது இடத்திலும், பிரான்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனா