தனியார் நாளிதழல் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற நிதி ஆயோக் தலைமை செயல் அலுலவர் அமிதாப் கந்த் நாட்டில் முன்னெடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், இந்தியா போன்ற நாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது மிக கடினம். இங்கு ஜனநாயகத்தன்மை அதிகம் உள்ளதால் சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் உள்ளது.
அதேவேளை சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட வேண்டும் என்றால் சீர்திருத்தம் நிச்சயம் தேவை. அதற்கு அரசாங்கத்திற்கு கொள்கை உறுதி தேவை. நாட்டின் 10-12 மாநிலங்கள் நிலையான வளர்ச்சி பெறும்போது மற்ற மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதில் என்ன சிக்கல் என்பதை கண்டறிய வேண்டும்.
சுரங்கம், கனிமம், தொழிலாளர், வேளாண்மை ஆகிய துறைகள் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். தற்சார்பு இந்தியா என்பது மற்ற நாடுகளை புறக்கணித்து தனித்திருப்பது அல்ல. இந்திய நிறுவனங்களை சர்வதேச அளவில் உயரச் செய்வதாகும்.
நாட்டின் உற்பத்தியை உயர்த்தும் விதமாக 10 துறைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம் உள்ளது என்றார்.
இதையும் படிங்க: முதலீடு தேவைதான், எனினும் தேச பாதுகாப்பில் சமரசம் இல்லை: ரவிசங்கர் பிரசாத்