ETV Bharat / business

சீனாவுடனான இந்தியாவின் ஏற்றுமதி 21 விழுக்காடு அதிகரிப்பு

இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 2020ஆம் ஆண்டில் 77.7 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 110.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

author img

By

Published : Feb 2, 2022, 6:03 PM IST

India exports to China
India exports to China

டெல்லி: இதுகுறித்து வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவின்படி, 2021ஆம் ஆண்டில் இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை பொறுத்தவரை சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 21 விழுக்காடு ஏற்றம் கண்டு 22.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதேபோல இறக்குமதி 49 விழுக்காடு அதிகரித்து 87.5 பில்லியன் டாலராக உள்ளது.

அதன்படி 2020ஆம் ஆண்டில் 77.7 பில்லியன் டாலராக இருந்த மதிப்பு 2021ஆம் ஆண்டில் 110.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி என மொத்தமாக 42.2 விழுக்காடு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை 2019ஆம் ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுகையில், ​​2021ஆம் ஆண்டில் ஏற்றுமதி 33.9 விழுக்காடாக உயர்ந்திருந்தது.

அதேவேளையில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கான இறக்குமதி 2019ஆம் ஆண்டில் 68.4 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் 2020ஆம் ஆண்டு 58.7 பில்லியன் டாலராகக் குறைந்தது. இருப்பினும் 2021ஆம் ஆண்டில் 87.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மொத்தமாக சீனா நாடானது 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: Budget 2022: எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்; தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.