ETV Bharat / business

ஜிஎஸ்டி இழப்பீட்டு விவகாரத்தின் தாக்கமும் அதன் நிலவரமும்

கோவிட்-19 தாக்கத்தால் ஜி.எஸ்.டி வரி வசூலில் ஏற்பட்டுள்ள தாக்கங்களும், அதன் காரணமாக மாநில அரசுகள் சந்திக்கும் நிதி நெருக்கடிகளும் பற்றி பொருளாதார நிபுணர் முனைவர் எஸ்.ஆனந்த் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ.

author img

By

Published : Sep 22, 2020, 10:39 PM IST

GST compensation
GST compensation

கடந்த மாதமும், அடுத்த மாதமும் இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்கக் கூடிய, குறிப்பாக வரிகள் மற்றும் கடன்கள் மீதான முடிவுகளை எடுக்கக் கூடிய மிக முக்கியமான மாதங்கள். கூடுதலாக மேலும் 1.6 லட்சம் கோடிகள் கடன் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்குமாறு பாராளுமன்றத்தை மத்திய அரசு கேட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள பூசல்கள் மற்றும் சர்ச்சைகளை சமாளிக்கும் விதமாக இந்த கடன் வாங்கலுக்கு 13 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலுக்கு தீர்வுகள் காணப்பட இயலாதவண்ணம், பல மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் மத்திய-மாநில அரசிகளின் உறவுகளிலும், கூட்டாட்சியிலும், அரசியல் ரீதியிலும் பிரச்சனைகள் கிளம்பியுள்ளன. சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் இதன் மீது மத்திய அரசின் தலையீடு ஆகியவற்றால் சிக்கல்கள் மேலும் பூதாகரமாக வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சிக்கல்களை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம் என்று பல்வேறு தரப்புகள் தெரிவிக்கின்றன.

பொதுக் கொள்கை வகுத்தலில் புதிய படிப்பினைகளை இந்த சிக்கல்கள் தந்துள்ளன. இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யும் போது, முன்பைப் போல இல்லாமல் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் சாயம் இருத்தல் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இந்தியா போன்ற பன்முக சூழல் கொண்ட நாட்டில் தேசிய அளவிலான கொள்கைகளை வகுக்கும் போது ஆழ்ந்த பகுப்பாய்வுகளுடன் விவேகமான சிந்தனை இருக்க வேண்டும்.

ஜிஎஸ்டி இழப்பீடு: சட்டமும், அதன் விதிகளும்

நடைமுறைப்படுத்திய முதல் நாளில் இருந்தே, ஜிஎஸ்டி மோசமான விளைவுகளையே அளித்து வந்துள்ளது. மத்திய , மாநில அரசுகள் இந்த விஷயத்தில் ஆழ்ந்த பகுப்பாய்வு செய்யாமல், விவேகமாக செயல்படாமல் விட்டதன் விளைவுதான், இப்போது உலகத்தையே எதிர்பாராத விதமாக ஆட்டிப்படைக்கும் கோவிட் பேரிடர் காலத்தில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. தங்களை பெரிய மாற்று சக்தியாக நிலைநிறுத்தி அரசியல் செல்வாக்கை கூட்டுவதற்காக, அதிகாரத்தில் இருப்பவர்கள் முக்கியமான பிரச்சனைகளை புறந்தள்ளி விட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 31, 2016 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவசர அவசரமாக வாக்குறுதிகள் அளித்த மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) 2017 சட்டத்தைக் கொண்டு வந்தது. மத்திய ஆரசின் வாக்குறுதியை நம்பிய மாநிலங்கள், பொருளாதார பகுப்பாய்வுகளை மேற்கொள்ளாமல் அவசர கதியில் ஒப்புதல் அளித்தன. ஐந்து ஆண்டுகள் இடைநிலை காலத்தில் மாநிலங்களுக்கு, உட்படுத்திய வரிகள் வருவாயில் இருந்து கிடைக்கும் திட்டமிட்ட வருவாய் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 14% (பிரிவு 3) என்று கூறப்பட்டதால் அதீத ஆர்வத்தோடு மாநிலங்கள் முன்வந்தன.

இதில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால், அந்த இழப்பை மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு (2022 முடியும் வரை) ஏற்றுக்கொள்ளும். இடைநிலை காலத்தில் ஏற்படும் பற்றாக்குறையை சரிசெய்ய, மறைமுக வரிகள் விதிக்கப்பட்டு, அவை காலாவதியாகாத ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் (பிரிவு 10) வைக்கப்படும். இதன் மூலம் மாநிலங்களின் வருவாய் 14% அளவுக்கு ஆண்டுதோறும் உயரும் என்றும், இதனால் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தவறாக எடுத்துரைக்கப்பட்டது. நாம் நட்ட மரம் வானம் அளவுக்கு வளரும் என்ற தவறான புரிதலின் விளைவால், ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தியது முதல் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இதன் உச்சமாக, கோவிட் தாக்குதலுக்கு முன்பே பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதைக்கு சென்று விட்டது.

இதில் பற்றாக்குறை மிகப் பெரிய அளவில் உள்ளது. கணிக்கப்பட்ட தொகை, ரூ. 3 லட்சம் கோடி. இதில் இழப்பீட்டு நிதியாக வசூல் செய்யப்பட்டது, 65,000 கோடி ரூபாய். ஆக, பற்றாக்குறை ரூ.2.35 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுருக்கமாக கூற வேண்டுமென்றால், பெரும்பாலான மாநிலங்களில் கோவிட் பாதிப்பால் பற்றாக்குறை மிக அதிகளவில் இருப்பதால், வசூல் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் மாநிலங்களுக்கு நிதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதையே தான் சட்டமும் சொல்கிறது. சட்டத்தின் பிரிவு 6 மற்றும் பிரிவு 7 ஆகியவற்றில் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளபடி, இடைநிலை காலத்தில் (ஐந்து ஆண்டுகளுக்கு) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பற்றாக்குறை ஏற்படும் போது மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. முக்கியமாக 12 வது பிரிவில் உள்ளபடி, ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின்படி அடிப்படை ஆண்டில் வருவாய் செலுத்தப்படவில்லை எனில் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும், செஸ் வரி வசூலிக்கபட வேண்டும். எனவே ஜிஎஸ்டி இழப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படாமல், மத்திய அரசு தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்க முடியாது.

தாக்கங்கள்

எந்த ஒரு அரசியலமைப்பு விதியோ அல்லது சட்டமோ இயற்றப்பட்டால், அதை முழுமுதலாக ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்பது தான் நமது கொள்கை. சட்டத்தை முழுமையாக பின்பற்றுவதை கைவிட்டு, ‘கடவுள்’ காப்பாற்றுவார் என்ற போக்கை கடைபிடிப்பது தவறானது. அது பொதுமக்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி. இது தான் சட்டத்தின் தார்மீக அடிப்படை.

இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை என்னவெனில், இந்த சட்டத்தில் விலக்கு ஏதும் அளிக்கப்படவில்லை, அதனால் மாநிலங்கள் வேறு மாற்றுத் தீர்வுகளுக்கு ஒப்புக்கொள்ளும் வரை, மத்திய அரசு நிதி அளித்தே ஆக வேண்டும். எனவே, இரண்டு சலுகைகளில் ஒன்றை எடுத்துக்கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு வற்புறுத்தக் கூடாது.

முக்கியமாக இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 -இல் உள்ள “கடவுளின் சட்டம்” என்ற விதியை ஜிஎஸ்டி இழப்பீட்டு விவகாரத்தில் கொண்டு வரவே முடியாது. சட்டப்பூர்வ அடிப்படையின் படி பொதுச் சட்டமானது (இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872) சிறப்புச் சட்டத்திற்கு (ஜிஎஸ்டி மாநிலங்களின் இழப்பீட்டுச் சட்டம்) வழிகாட்ட வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

பொருளாதாரத்தின் எதிர்காலத்தை தவறாக கணித்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டை ஒப்புக்கொண்டபடி மாநிலங்களுக்கு அளிப்பதை மத்திய அரசு மீண்டும் உறுதி செய்ய வேண்டும். இரண்டாவதாக, தனது அரசியலமைப்பு கடமைகளில் இருந்து பின்வாங்கும் விதமான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.

இது அந்நிய முதலீட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மத்திய அரசின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள் என்பதை மறுக்க முடியாது. மூன்றாவதாக, மத்திய அரசு தனது சட்டப்பூர்வ வாக்குறுதியில் இருந்து பின்வாங்கும் பட்சத்தில், அது மத்திய – மாநில அரசுகளிடையே இருக்கும் நல்லுறவுகளை முற்றிலும் சிதைக்கும், அத்துடன் கூட்டாட்சி நிலைத்தன்மை கெடும்.

இந்தியாவின் சிறப்பான செயல்பாடு மற்றும் வளர்ச்சி என்பது மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட அளவிலான அரசு எந்திரங்கள், பொதுமக்கள் என அனைத்து பங்களிப்பாளர்களின் ஒத்திசைவால் மட்டுமே சாத்தியமாகும். தலைமை இடத்தில் அமர்ந்து கொண்டு, யாருடனும் கலந்து ஆலோசிக்காமல் சிக்கல்களுக்கு தீர்வுகளை மேற்கொள்வது, எந்த வகையிலும் யாருக்கும் பலனைத் தராது.

இறுதியாக, மாநிலங்களை கடன் வாங்க நிர்பந்திப்பதால் பொதுமக்களுக்கு மேலும் நிதிச்சுமைகள் அதிகரிக்கவே செய்யும். அரசுகள் கடன் வாங்க முடிவு செய்தாலும், அந்த முடிவால் சில மாதங்கள் தாக்குபிடிக்கலாம். அதன் பின் பொருளாதார சிக்கல் மேலும் அதிகரிக்கவே செய்யும். மாநிலங்கள் அதிகளவில் கடன்கள் வாங்குவதால் எதிர்காலத்தில் அதிக வரிச்சுமையில் சிக்கி பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதே நிதர்சனம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.