ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளூம் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் எதிர்தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அமெரிக்க போர்ப்படையினர் கடும் பதிலடி தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறைகூவல் விடுத்துள்ளார்.
அதேபோல், தன்னாட்டின் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு சரியான வகையில் பழித்தீர்ப்போம் என ஈரான் அரசும் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
இந்த இருநாடுகளுக்கு இடையே நிகழ்ந்துள்ள போர் பதற்றம் இந்திய பொருளாதாரத்தை மறைமுகமாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியா உற்பத்தி செய்யும் தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு ஈரான். அங்கு தற்போது நிலவிவரும் பதற்ற சூழலால் இந்திய தேயிலை ஏற்றுமதியை பாதிக்கும் என தேயிலை வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பி.கே. பெஸ்பருவா கவலை தெரிவித்துள்ளார்.
இதே சூழல் தொடரும்பட்சத்தில் ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி சாத்தியமில்லை என இந்திய தேயிலை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் தேயிலை சந்தைமதிப்பானது நடப்பாண்டில் சரிவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா