பெங்களூரு: பரிவர்த்தன் திட்டத்தின் மேம்பாட்டுக்காக 400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில், ஹெச்.ஏ.எல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் கையெழுத்திட்டன.
‘பரிவர்த்தன் திட்டம்’ என்பது தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மையப்படுத்தப்பட்ட கருவூலத்தை மேம்படுத்துவதாகும்.
இது ஹெச்ஏஎல் நிறுவனம் தொடங்கிய ஒரு விரிவான வணிக மாற்று பயிற்சியென ஹெச்ஏஎல் அலுவலர் ஆர். மாதவன் தெரிவித்தார். இந்தப் பயிற்சி உலகளவில் இதேபோன்ற தொழில்களை செய்துவரும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.ஏ.எல்.இன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும், நவீனமயமாக்குவதற்கு ஆதரவு தரவும் இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக டெக் மஹிந்திரா பொறுப்பேற்கும். மேலும், ஹெச்ஏஎல் நிறுவனம் திட்டத்தின் வணிக செயல்முறை தரப்படுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.