ETV Bharat / business

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் விவரத்தை வெளியிட்ட மத்திய நிதியமைச்சகம் - நாட்டின் ஜிஎஸ்டி வசூல்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 18 சதவீதம் அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூல் இருந்துள்ளது.

GST collection
GST collection
author img

By

Published : Mar 2, 2022, 8:37 AM IST

ஜனவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,33,026 கோடியாக வசூலிக்கப்பட்டது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.24,435 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ.30,779 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.67,471 கோடி மற்றும் மேல்வரி ரூ.10,340 கோடி.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.26,347 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.21,909 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாய் வழக்கமான, தற்காலிக பணம் செலுத்துதலுக்குப்பின்பு, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.50,782, மாநில ஜிஎஸ்டிக்கு ரூ. 52,688 கோடியாக இருந்தது.

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருந்ததால் ஜனவரியை விட வருவாய் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியை 5-வது முறையாக கடந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக மேல்வரி வசூல் ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளதற்கு முக்கிய துறைகள் குறிப்பாக வாகனங்கள் விற்பனை அதிகரித்ததும் காரணமாகும்.

தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வசூல் ரூ.7,393 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.7,008 கோடி வசூலாகியிருந்தது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலாகியிருந்த ரூ.158 கோடிக்கு பதிலாக இந்த ஆண்டு ரூ.178 கோடியாக ஜிஎஸ்டி வசூல் இருந்தது. இது 13 சதவீதம் அதிகமாகும்.

மொத்தத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 18 சதவீதம் அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூல் இருந்துள்ளது.

இதையும் படிங்க: வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.