கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸால் பாதிப்படைந்திருக்கும் மக்கள் இந்தக் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிமானவரி செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்துள்ளார்.
அதன்படி 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமானவரியை தாக்கல் செய்ய வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தாமதமாகச் செலுத்தப்படும் வருமானவரியின் வட்டியை 12 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைக்கும் கடைசி நாளை மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. நாடெங்கிலும் நடக்கும் இந்த முடக்கத்திலிருந்து மக்கள் மீண்டு வர வழி செய்யும் வகையில் விவாத் சே விஸ்வாஸ் திட்டமும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பெறுபவர்கள் அசல் தொகைக்கான 10 சதவிகித வட்டியை செலுத்தத் தேவையில்லை.
வருமானவரிச் சட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிடுவதற்கான தேதிகளுக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... கரோனா எதிரொலி - மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு!