கறுப்புப் பணம் பதுக்குபவர்களைக் கண்டறிய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கறுப்புப் பணம் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தவர்களிடம், அதற்கான வரியை வசூல் செய்ய மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது தங்கத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது வழக்கு ஏதும் இல்லாமல் பொது மன்னிப்பு வழங்கி, அவர்கள் பதுக்கிய தங்கத்துக்கான வரியை வசூல் செய்வதே இலக்காகும். 2017ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் மூலம், வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு, வழக்கு இல்லாமல் வரி செலுத்த திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்தின் மூலம் அரசின் வருவாய் கணிசமாக உயர்ந்தாலும், இதை செயல்படுத்தும் வழிமுறைகள் கடுமையான சவாலாக இருந்தது. அதுபோல இந்த கறுப்புப் பண தங்க முதலீட்டின் மீது வரி பெறுவது அரசுக்கு சவால் மிகுந்த விவகாரமாக இருந்தாலும், பெருமளவு பதுக்கப்பட்டிருக்கும் தங்கம் வெளியே கொணரப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய தபால் துறையின் விரிவுபடுத்தப்பட்ட பேமெண்ட்ஸ் பேங்க் சேவை விரைவில்...