கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. உலகெங்கும் இதுவரை இந்த வைரஸ் தொற்றால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ‘Give India’ என்ற தன்னார்வ அமைப்பிற்கு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இத்தகவலை Give India அமைப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதுவரை Give India அமைப்பு 12 கோடி ரூபாய் நிதியுதவியை திரட்டியுள்ளது.
-
Thank you @sundarpichai for matching @Googleorg 's ₹5 crore grant to provide desperately needed cash assistance for vulnerable daily wage worker families. Please join our #COVID19 campaign: https://t.co/T9bDf1MXiv @atulsatija
— GiveIndia (@GiveIndia) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you @sundarpichai for matching @Googleorg 's ₹5 crore grant to provide desperately needed cash assistance for vulnerable daily wage worker families. Please join our #COVID19 campaign: https://t.co/T9bDf1MXiv @atulsatija
— GiveIndia (@GiveIndia) April 13, 2020Thank you @sundarpichai for matching @Googleorg 's ₹5 crore grant to provide desperately needed cash assistance for vulnerable daily wage worker families. Please join our #COVID19 campaign: https://t.co/T9bDf1MXiv @atulsatija
— GiveIndia (@GiveIndia) April 13, 2020
முன்னதாக, கோவிட்-19 வைரஸ் தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளுக்கு உதவும் வகையில் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை கூகுள் நிறுவனம் வழங்கும் என்று சுந்தர் பிச்சை கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
குறிப்பாக, உலகெங்கும் உள்ள சிறு குறு வணிகர்களுக்கு உதவும் வகையில் தொண்டு நிறுவனங்களிலும் நிதி நிறுவனங்களிலும் 200 மில்லியின் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்றும் கூகுள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 20க்கு பின் எவ்வாறு இயங்க வேண்டும்? உள்துறை அமைச்சகம் அறிக்கை