தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் விலை நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.187 அதிகரித்துள்ளது. அந்த வகையில் 10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.38,866 என வர்த்தகம் ஆனது. இதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்து காணப்பட்டது.
வெள்ளியை பொறுத்தமட்டில் கிலோ ரூ.495 அதிகரித்து ஒரு பார் வெள்ளி ரூ.46,499 ஆக உள்ளது.
இதையும் படிங்க: புதிய உச்சத்தில் வெங்காய விலை!