ETV Bharat / business

'கடன் தள்ளுபடி செய்தால் வங்கிகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கும்' - ரிசர்வ் வங்கி

டெல்லி: ஊரடங்கை காரணம் காட்டி வங்கிகளைத் கடன் தள்ளுபடி செய்ய வற்புறுத்தும் பட்சத்தில், அவற்றின் ஸ்திரத்தன்மை சீர்குலையும் என உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

RBI
RBI
author img

By

Published : Jun 4, 2020, 4:57 PM IST

ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பையடுத்து, வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான இஎம்ஐ (EMI) செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வீட்டிலேயே அனைவரும் முடங்கியுள்ள நிலையில், வருவாய்க்கு வழியின்றி மக்கள் தவித்துவருகின்றனர். இத்தகைய சூழலில், வங்கிக் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி தற்காலிகமாக விலக்கிக்கொள்ளாமல் கடன் தவணைக்கான காலக்கெடுவை மட்டுமே நீட்டித்துள்ளது, சட்டத்திற்குப் புறம்பானது என்றும், கடன் வட்டி வசூல் செய்யக் கூடாது எனவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேட்ட விளக்கத்திற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி, ”தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டுதான் கடன் தவணை ஒத்திவைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இந்த நீட்டிப்பு, வரும் ஆகஸ்ட் இறுதி வரை இருக்கும். தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுவரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சுமார் மூன்று மாத கால அவகாசம் உள்ளது.

இதற்கு மேல் வங்கிகள், வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் அளிப்பது இயலாத காரியம். ஒட்டுமொத்தமாக கடன் தள்ளுபடி என்பது வங்கிகளின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைத்து, பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய விவசாயத் துறையில் நுழையும் மைக்ரோசாப்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.