டெல்லி: அமெரிக்க நிறுவனம் வால்-மார்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட், ‘தி பிக் பில்லியன் டே சேல்’ என்னும் பெரும் சலுகை விற்பனை நிகழ்வை அக்டோபர் 16 - 21ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.
மொத்தமாக 6 நாள்கள் நடைபெறும் இந்தச் சலுகை விற்பனை நிகழ்வில், பல லட்சக்கணக்கிலான பொருள்களை சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தங்களிடம் இணைப்பில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதன்மூலம் பெரும் பயனடையும் என்றும் கூறியுள்ளது.
அழைப்புகளில் காத்திருக்க தேவையில்லை; உங்களுக்காக காத்திருக்கும் கூகுள்!
இதற்குப் போட்டியாக அமேசான் இந்தியா நிறுவனமும், சலுகை விலை விற்பனை நிகழ்வுக்கான தேதியை விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது. இச்சூழலில் முன்னதாகவே தனது சலுகை விற்பனை நிகழ்வை இந்திய நிறுவனமான ஸ்நாப்டீல் அறிவித்திருந்தது. ஸ்நாப்டீல், இதுமட்டுமில்லாமல் மேலும் இரண்டு சலுகை நிகழ்வுகளை அக்டோபர் முடிவிலும், நவம்பர் மாதத் தொடக்கத்திலும் அறிவித்திருக்கிறது.
ரெட்சீர் நிறுவனத்தின் பகுப்பாய்வில், கடந்த வருடத்தை காட்டிலும், விழாகால இணைய வர்த்தக விற்பனை இந்தாண்டு இரட்டிப்பாகும் என்று தெரிவித்துள்ளது. இந்த விற்பனையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 70ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்று பிளிப்கார்ட் கூறியுள்ளது.