நாட்டில் உள்ள போலி ஜி.எஸ்.டி. கணக்குகளை கண்டறிய மத்திய அரசு கடந்த இரு மாதங்களாக தீவர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மத்திய வருவாய் அமைச்சகம் சார்பில் ஜி.எஸ்.டி. தொடர்பான அனைத்து புள்ளிவிவரம், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் சந்தேகத்திற்கு இடமான கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதன்மூலம், சுமார் 1.63 லட்சம் போலி ஜி.எஸ்.டி. எண்கள் செயல்பட்டுவந்தது கண்டறியறிப்பட்டது. இரு மாதங்களாக நடைபெற்ற இந்த அதிரடி ஆய்வில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 ஆயிரத்து 568 போலி நிறுவனங்கள் மீது 1,430 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அக்ஷய் ஜெயின் என்ற கணக்கர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் வருவாய்த்துறை அலுவலர் கூறியுள்ளார்.
சென்னை மண்டலத்தில் மட்டும் 19,500 போலி ஜி.எஸ்.டி. எண்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அகமதாபாத் மண்டலத்தில் 11 ஆயிரம் ஜி.எஸ்.டி. எண்கள் நீக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் துறைக்கான கடனுதவியை அதிகப்படுத்த வேண்டும்: அமிதாப் கந்த்