ETV Bharat / business

நாட்டின் ஏற்றுமதி 21 விழுக்காடு உயர்வு - வணிகச் செய்திகள்

செப்டம்பர் மாத விவரப்படி நாட்டின் ஏற்றுமதி 21.44 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.

Exports rise
Exports rise
author img

By

Published : Oct 14, 2021, 9:13 PM IST

நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான புள்ளிவிவரத்தை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பீடு 54.06 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடும் போது 21.44 விழுக்காடு அதிகம்.

செப்டம்பர் மாத சரக்கு ஏற்றுமதி 22.63 விழுக்காடு உயர்ந்து மதிப்பானது 33.79 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெட்ரோலியம், பொறியியல் சாதனங்கள் சிறப்பாக உயர்வை கண்டுள்ளன.

இறக்குமதியை பொருத்தவரை செப்டம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த இறக்குமதி 70 விழுக்காடு உயர்ந்து மதிப்பானது 68.49 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாத சரக்கு இறக்குமதியானது 84.77 விழுக்காடு உயர்ந்து அதன் மதிப்பானது 56.39 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் கட்டுக்குள்வந்து பொது முடக்கம் நீக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அதைக்குறிக்கும் விதமாக கடந்தாண்டை ஒப்பிடும் போது ஏற்றுமதி, இறக்குமதி குறியீடுகள் உயர்வைக் கண்டுள்ளன.

இதையும் படிங்க: இணையதளத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான வருமான வரித் தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.