ETV Bharat / business

கோவிட் 19 காலத்தில் காப்பீட்டின் தேவை - நிபுணரின் சிறப்புக் கட்டுரை - கோவிட் 19 பாதிப்பு காப்பீட்டுத் தேவை

கரோனா பெருந்தொற்று காலத்தில் காப்பீட்டின் தேவைகள் மற்றும் சாதாக பாதகங்கள் குறித்து நிதி மேலாண்மை நிபுணர் சங்கர் குமார் ராய் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

கோவிட் 19
கோவிட் 19
author img

By

Published : Jun 28, 2020, 3:39 AM IST

கரோனா வைரஸ் காலத்தில் சுகாதார காப்பீட்டு பற்றிய இந்திய குடும்பங்களின் கண்ணோட்டம் மாறி வருகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, ​​எந்த நிறுவனமும் மருத்துவ காப்பீடு அல்லது மருத்துவ உரிமைகோரலை வழங்க மாட்டார்கள் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். மேலும், உங்களிடம் மருத்துவ காப்பீடு இல்லையென்றால், உங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து மருத்துவமனை கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.

கோவிட்-19 நோயாளிகளின் அடிப்படை சிகிச்சைக்காக உயர்தர மருத்துவமனைகள் அதிக பணம் வசூலிக்கின்றன. ஒரு சில மாநிலங்களில், மாநில அரசு சிகிச்சைக்கு பணம் செலுத்துகிறது. அரசு மருத்துவமனைகள் ஒரு குறிப்பிட்ட அளவிலான சுகாதார சேவையை வழங்குகின்றன. நீங்கள் மிக சிறப்பான சிகிச்சையை விரும்பினால், அதற்கு பணம் செலுத்துங்கள்.

கரோனா வைரஸ் நோயாளிகள் என்று வரும்போது பில் தொகை ரூ .8-10 லட்சம் என்பது இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. ஐ.சி.யு, வென்டிலேட்டர்கள், மருத்துவர் கட்டணம், நர்சிங் கட்டணம், மருந்துகள், ஊசி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அனைத்தும் உங்கள் பாக்கெட்டைக் காலி செய்கின்றன.

இந்த கட்டுரையில், பல்வேறு வகையான காப்பீடு திட்டங்களில் உள்ள பாதுகாப்பு அம்சம், கால அளவு, அனுகூலம் போன்றவற்றில் இருக்கும் வேறுபாடுகளை பார்ப்போம். காப்பீடு திட்டங்களை வாங்குவதற்கு முன் அதில் உள்ள சாதக பாதகங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக சுகாதார காப்பீட்டுக் திட்டங்கள் என்பது புதிய கரோனா வைரஸ் நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் சிகிச்சை கட்டணங்களை உள்ளடக்கியது. இந்த வகை திரும்பப் பெறும் திட்டங்களில், காப்பீட்டு பணம் நேரடியாக பணமில்லா முறை மூலம் மருத்துவமனைக்கு செலுத்தப்படுகிறது. எந்தவொரு வியாதிக்கும் நீங்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவுடன், உங்கள் காப்பீட்டு உறுதித் தொகை போதுமானதாக இருந்தால் அனைத்தும் தானாகவே நடக்கும். சிலர் கூடுதல் செலவில்லாமல் வீட்டு பராமரிப்பு சிகிச்சையை கூட நாடுகிறார்கள்.

பாலிசிதாரருக்கு கோவிட் -19 போன்ற ஒரு குறிப்பிட்ட வியாதி இருப்பது கண்டறியப்பட்டால், முன்பணத் தொகையை செலுத்தும் நிலையான நன்மைத் திட்டங்களும் உள்ளன. அத்தகைய கோரலுக்கு மருத்துவமனை பில்கள் தேவையில்லை. mediclaim வகை மருத்துவ காப்பீட்டுக் திட்டத்தில், மருத்துவமனையில் ஒரு நோய் அல்லது சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான நுகர்பொருட்களின் விலையை ஈடுசெய்யாது.

கோவிட்-19 க்கு எதிராக குறுகிய கால சுகாதாரக் காப்பீட்டு திட்டங்களை வழங்க காப்பீட்டாளர்களை காப்பீடு ஒழுங்குபடுத்தும் அமைப்பான IRDAI அனுமதித்துள்ளது. பொது மற்றும் சுகாதார காப்பீட்டாளர்கள் இழப்பீடு அடிப்படையிலான (பாரம்பரிய) மற்றும் நன்மை அடிப்படையிலான குறுகிய கால சுகாதார காப்பீட்டுக் திட்டங்கள் இரண்டையும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாதக, பாதகங்கள்

திரும்பப் பெறும் திட்டங்கள் (பொது சுகாதார பாதுகாப்பு) தனிநபர்கள் அல்லது குடும்பத்தினருக்கு (மாறுபடும் நிலை) இருக்கலாம். தற்போதுள்ள மருத்துவக் திட்டங்கள் கோவிட் -19 ஐ உள்ளடக்கியது. இருப்பினும், காப்பீட்டுக் திட்டம் இல்லாத பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் கோவிட்-19 பாதுகாப்பை உள்ளடக்கிய ஒரு மருத்துவ காப்பீட்டு வாங்க விரும்புகிறார்கள்.

எல்லா வகையான நோய்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான தயாரிப்பு, சில குறைபாடுகளைக் கொண்டிருக்கும். சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் அறைக்கு துணை வரம்புகள் (ஒரு நாள் வரம்பு), பல்வேறு செலவுகள் மற்றும் சில செலவுகள் வரும்போது அதற்கு விலக்குகளும் இருக்கலாம். எந்தவொரு சிகிச்சையும் இல்லாமல் தனிமைப்படுத்தல் என்பது இந்த காப்பீட்டில் சேராது.

கூடுதலாக, பொதுவான மருத்துவ காப்பீடு திட்டங்கள் சில செலவுகளுக்கு பணம் செலுத்தாது. உதாரணமாக, கரோனா வைரஸ் நோயாளி சிகிச்சையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் PPEக்கள், காப்பீட்டாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையே வரும் சர்ச்சையின் ஒரு கட்டமாகும்.

முதலாவதாக, PPE களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை இல்லை என்பதால் மருத்துவமனைகள் தன்னிச்சையான தொகையை வசூலிக்கின்றன. இரண்டு, PPEக்கள் சில திட்டங்களில் அடங்காது, எனவே ஒரு பொதுவான கொரோனா வைரஸ் நோயாளி சிகிச்சையில் 25% பில் தொகையை சுகாதார காப்பீட்டு நிறுவனம் அளிக்காமல் போகலாம். இருப்பினும், சில மருத்துவமனைகளில், PPEக்களுக்கு தனியாக கட்டணம் வசூலிக்காமல் ஒட்டுமொத்த அறை வாடகையின் ஒரு பகுதியாக வசூலிக்கின்றனர்.

ஒரு நல்ல செய்தி என்னவென்றால், IRDAI-ன் கோவிட்-19 நிலையான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் PPE கிட், கையுறைகள், முகமூடி மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிற செலவுகள் போன்றவையும் அடங்கும்.

மருத்துவமனைக்கு முந்தைய மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சையில் அதிக பாதுகாப்பு, மற்றும் மருத்துவமனை ரொக்கச் சேர்க்கை போன்ற மதிப்பு கூட்டப்பட்ட நன்மைகள் போன்ற காரணங்களால் திரும்பப் பெறும் திட்டங்கள் பெரிய அளவில் விரும்பப்படுகிறது.

முன்னர் குறிப்பிட்டபடி, சிகிச்சையளிக்கும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால், சில திட்டங்கள் வீட்டு பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்கின்றன. கோவிட்-19 வீட்டு பராமரிப்பு சிகிச்சை, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் மாநில அரசு விதிமுறைகளால் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி தேவைப்பட்டால், காப்பீடு செய்யப்பட்டவர் சிகிச்சையளிக்கும் மருத்துவர் / சேவை வழங்குநரால் அடுத்த நடவடிக்கைக்கு வழிகாட்டப்படுவார். காப்பீட்டாளர் பணமில்லா மற்றும் திரும்பப் பெறும் சேவைக்கு உதவுகிறார்.

நிலையான அனுகூலம் சார்ந்த மருத்துவ திட்டங்களில், நோய் அறிக்கைகள் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனத்தால் பாலிசிதாரருக்கு பணம் தரப்படுகிறது. சில சமயம், ஆய்வக அதிகாரிகளின் நோயறிதல் அறிக்கையை உரிமை கோரலுக்காக பயன்படுத்தலாம், எனவே வாடிக்கையாளர்கள் இந்த பகுதியை மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும். கரோனா வைரஸிற்கான நிலையான நன்மைத் திட்டங்கள் வழக்கமாக வழங்கும் ரூ .2 லட்சம் தவிர பெரிய நன்மைகளை தருவதில்லை.

நீங்கள் பணத்தை முன்கூட்டியே பெறுவதால், நீங்கள் விரும்பும் எந்த வகையிலும் அதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், பணம் செலுத்துதல் கரோனா வைரஸ் நோய் கண்டறிதலை அதாவது லேசானதா, மிதமானதா அல்லது கடுமையானதா என்பதை சார்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நிலையான நன்மைத் திட்டங்கள் பாதுகாப்பற்றது என்பதால், காப்பீட்டு திட்டங்கள் டிசம்பர் 31, 2019க்குப் பிறகு வேறு இடத்திற்கு பயண வரலாற்றைக் கொண்டவர்களை விலக்குவது, சந்தேகத்திற்குரிய நபர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்டால் இறுதியில் அவர்கள் உறுதிப்படுத்தப்பட்டலாம் என்பதால் குறைந்த அளவோ அல்லது எந்த தொகையையோ தராமல் போகலாம் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகளைக் கொண்டிருக்கலாம்,

நிலையான நன்மை திட்டங்களுக்கு (பொதுவாக 65 வயது வரை) நுழைவு வயதைக் கவனியுங்கள். மூத்த குடிமக்களும், தற்போதுள்ள வியாதிகளும் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு திட்டம் கிடைப்பது கடினம். சில நிலையான நன்மை திட்டங்கள் 75 வயதுடைய நோயாளிகளை உள்ளடக்கியுள்ளது ஆனால் பிற தகுதி விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது.

சரியான அணுகுமுறை

கரோனா வைரஸ் சிகிச்சையால் ஏற்படக்கூடிய நிதி சவால்களைச் சமாளிப்பதற்கான சரியான அணுகுமுறை ஒரு சாதாரண சுகாதார காப்பீட்டுக் திட்டத்துடன் ஒரு நிலையான நன்மைத் திட்டத்தை இணைப்பதாகும். நீங்கள் இரண்டு பாலிசிகளை வாங்க வேண்டும். ஒவ்வொரு நோய் மற்றும் வியாதிகளுக்கும் ஒரு விரிவான மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக ஒன்று மற்றும் அதிகபட்ச காப்பீட்டைக் கொண்ட வழக்கமான சுகாதார காப்பீட்டு திட்டத்திற்காக மற்றொன்று .

4-5 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு குடும்ப காப்பீட்டு திட்டம் நன்றாக இருக்கும், மேலும் காப்பீட்டு தொகையும் சமாளிக்கக் கூடியதாக இருக்கும். ரூ .1-3 லட்சம் வரி சிறிய காப்பீடு தொகை உள்ளவர்கள், அதனை மேம்படுத்த டாப்-அப் பாதுகாப்பு எடுக்கலாம்.

சர்ச்சைக்குரிய பிபிஇ கட்டணங்கள் போன்ற கோவிட்-19 உடன் தொடர்புடைய கூடுதல் செலவுகளுக்கு, ஒரு நிலையான நன்மைத் திட்டம் மற்றொரு பாதுகாப்பு நிதிக் கவசத்தைச் சேர்க்கலாம். மருத்துவமனையில் சேர்க்கும் போது முதலாளி சம்பளம் வழங்காவிட்டால், இந்த திட்டத்திலிருந்து வரும் பணம் குடும்பத்தை நடத்துவதற்கு பயன்படுத்தப்படலாம்

குறிப்பு: மேலே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் முழுக்க முழுக்க ஆசிரியரின் கருத்துக்கள் மற்றும் ஈடிவி பாரத் அல்லது அதன் நிர்வாகத்தின் கருத்துகள் அல்ல.

மேலேயுள்ள கருத்துகள் முதலீட்டு ஆலோசனையாகக் கருதப்படக்கூடாது, மேலும் முதலீடு செய்வதற்கு முன் தகுதிவாய்ந்த ஆலோசகரை அணுகுமாறு வாசகர்களை ஈடிவி பாரத் பரிந்துரைக்கிறது.

தனிப்பட்ட நிதி தொடர்பான ஏதேனும் கேள்விகள் உங்களிடம் இருந்தால், ஒரு நிபுணரின் பதில்களைப் பெற முயற்சிப்போம். முழுமையான விவரங்களுடன் businessdesk@etvbharat.com இல் எங்களை அணுகவும்.

இதையும் படிங்க: 'கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற அவகாசம் தேவை' - கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.